புளோரிடாவில் வரலாற்று சிறப்புமிக்க கொலம்பியா மாமத்தின் எலும்புக்கூடு, சுறாக்களின் புதைப்படிவங்கள் கண்டுபிடிப்பு

புளோரிடாவில் சுறாக்களின் புதைப்படிவங்கள் கண்டுபிடிப்பு

கொலம்பிய மாமத்தின் ஒரு பெரிய கால் எலும்பையும், மெகலோடோன் என்றழைக்கப்படும் சுறாக்களின் பற்கள் மற்றும் பிற சுறா இனங்களையும் விஞ்ஞான மேதாவிகள் கண்டுபிடித்துள்ளனர்.

  • Share this:
அமெரிக்காவின் புளோரிடாவில் பீஸ் நதி ஆர்கேடியாவில் (Peace river arcadia) ஸ்கூபா டைவிங் செய்யும் போது, இரண்டு விஞ்ஞான மேதாவிகள் சில அரிய புதைபடிவதங்களை கண்டுபிடித்துள்ளனர். டெரெக் டிமீட்டர் மற்றும் ஹென்றி சாட்லர் ஆகிய இரண்டு பேரும் ஆற்றின் இருண்ட நீரில் ஸ்கூபா டைவிங் செய்து கொண்டிருந்தனர். அப்போது கொலம்பிய மாமத்தின் ஒரு பெரிய கால் எலும்பையும், மெகலோடோன் என்றழைக்கப்படும் சுறாக்களின் பற்கள் மற்றும் பிற சுறா இனங்களையும் கண்டுபிடித்துள்ளனர்.

குறிப்பாக இந்த இருண்ட நதியில் அவர்களுக்கு 6 அங்குலங்கள் வரை மட்டுமே தெரிந்ததாக குறிப்பிட்டுள்ளனர். இந்த புதைப்படிவங்கள் வரலாற்றுக்கு முந்தைய பாலூட்டிகளுக்கு சொந்தமானவை என்பதால் இந்த கண்டுபிடிப்பு நிச்சயமாக ஆச்சரியமாக இருக்கிறது என்று டெரெக் கூறியுள்ளார். மேலும் அவர்கள் கண்டுபிடித்ததில் மிகப்பெரிய அர்மாடில்லோ, பைசன் மற்றும் குதிரையயின் புதைப்படிவங்களும் அடங்கும்.

 

 



 




View this post on Instagram





 

A post shared by Derek Demeter (@derekthediscoverer)






 

புளோரிடாவின் சான்ஃபோர்டில் உள்ள செமினோல் ஸ்டேட் கல்லூரியில் எமில் பியூஹ்லர் கோளரங்கத்தில் இயக்குநராக இருக்கும் டெரெக், கடந்த வாரம் தனது மிகச் சிறந்த ஸ்கூபா டைவிங் புகைப்படங்களை தொழில்முறை கல்வியாளராக இருக்கும் தனது நண்பர் ஹென்றி உடன் பகிர்ந்து கொண்டார். ஹென்றி தனது இன்ஸ்டாகிராம் கைப்பிடியில் இந்த புகைபடத்தைப் பகிர்ந்து கொண்டார். அந்த புகைப்படங்களில் அவர்கள் கண்டுபிடித்த கொலம்பிய யானையின் கால் எலும்பினை கையில் வைத்து போஸ் கொடுத்துள்ளார். மேலும் " இது நம்பமுடியாத கண்டுபிடிப்பு” என்று கேப்ஷன் செய்துள்ளார். அவர்கள் கண்டுபிடித்த புதைப்படிவங்கள் எவ்வாறு முற்றிலும் சேதமடையாமல் மற்றும் நன்கு கனிமமயமாக்கப்பட்டது என்பதைக் கண்டு மிகவும் ஆச்சர்யமடைந்ததாக குறிப்பிட்டுள்ளனர்.

 

 



 




View this post on Instagram





 

A post shared by Henry Sadler (@thinkseek)






 

 

 

மேலும் ஹென்றி தனது அடுத்த இன்ஸ்டாகிராம் பதிவில், ஒரு சுறாவின் கோரை பல் படத்தை வெளியிட்டார். அதனை 'புளோரிடா புதைப்படிவங்களின் புனித கிரெயில்' என்றும் விஞ்ஞான ரீதியாக எஸ். ஃபாடலிஸ் ஸ்மைலோடன் கோரைனின் பல்முனை என்றும் கேப்ஷன் செய்துள்ளார். மேலும் அந்த புதைப்படிவமானது சுறாவின் முழு பல்லில் மூன்றில் ஒரு பங்கு மட்டுமே என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையில், டெரெக் தனது சமீபத்திய இன்ஸ்டாகிராம் பதிவில், கொலம்பிய மாமத்தின் ஹுமரஸ் என்றும் அழைக்கப்படும் மாபெரும் கால் எலும்பைத் தூக்கி நிற்பதைக் காணலாம். மேலும் புதைப்படிவமானது “ஒரு டன்” எடையுள்ளதாக இருக்கும் என்று கேஷனில் குறிப்பிட்டிருந்தார். இது ஒரு நம்பமுடியாத கண்டுபிடிப்பு என்றும் குறிப்பிட்டிருந்தார்.

 

 



 




View this post on Instagram





 

A post shared by Derek Demeter (@derekthediscoverer)






 

இதுதவிர தன்னை பின்பற்றுபவர்களுக்கு வரலாற்று ரீதியாக கொஞ்சம் அறிவைக் கொடுத்த டெரெக், அமெரிக்க மாநிலமான புளோரிடாவில் கண்டுபிடிக்கப்பட்ட புதைப்படிவங்கள் வரலாற்றுக்கு முந்தைய சவன்னா புல்வெளிகளைச் 2 மில்லியன் முதல் 10,000 ஆண்டுகளுக்கு முன்பு சுற்றி வந்த மாபெரும் பண்டைய விலங்குகள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
Published by:Sankaravadivoo G
First published: