துபாயில் நேற்று நடைபெற்ற டி20 உலகக்கோப்பை போட்டியில் இந்திய அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தானிடம் தோல்வி தழுவியது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 151 ரன்கள் மட்டுமே எடுத்தது.
தொடர்ந்து, 152 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய பாகிஸ்தான் 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அந்த அணியின் தொடக்க வீரர்கள் கேப்டன் பாபர் ஆஷம் மற்றும் முகமது ரிஸ்வான் இருவரும் அதிரடியாக விளையாடி அணியை வெற்றி பெற செய்தனர்.
பாகிஸ்தானின் இந்த வெற்றியை உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் கொண்டாடினர். இந்தியாவிலும் ஒரு சில இடங்களில் பாகிஸ்தான் வெற்றியை சிலர் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.
இந்நிலையில், இந்தியாவுக்கு எதிரான டி20 போட்டியில் பாகிஸ்தான் வென்றது இஸ்லாத்தின் வெற்றி என பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ஷேக் ரஷீத் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பதிவில் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியதாவது, இந்தியாவுக்கு எதிரான பாகிஸ்தானின் வெற்றி இஸ்லாத்திற்கு கிடைத்த வெற்றி. இந்தியா உட்பட உலகம் முழுவதும் உள்ள முஸ்லிம்கள், டி20 போட்டி நடந்து கொண்டிருந்த போது, பாகிஸ்தான் வெற்றி பெற ஆதரவு தெரிவித்து வந்தனர்.
பாகிஸ்தானுக்கு, நேற்று நடந்த இந்த இந்தியா - பாகிஸ்தான் போட்டியே இறுதிபோட்டி என்றும் அவர் பெருமிதத்துடன் கூறியுள்ளார்.
Published by:Esakki Raja
First published:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.