Home /News /international /

ஜனவரி 18 முதல் பள்ளிகள் திறக்கப்படும்: பாகிஸ்தான் அரசு

ஜனவரி 18 முதல் பள்ளிகள் திறக்கப்படும்: பாகிஸ்தான் அரசு

பாகிஸ்தான் பள்ளி- கோப்புப் படம்

பாகிஸ்தான் பள்ளி- கோப்புப் படம்

பாகிஸ்தானில் ஜனவரி 18ஆம் தேதி முதல் படிப்படியாக திறக்கப்படும் என்று கல்வித்துறை அமைச்சர் அறிவித்துள்ளார்.

    பாகிஸ்தானில் கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளிகள் கடந்த மார்ச் மாதம் மூடப்பட்டன. பின்னர் பல தளர்வுகளுடன் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டன. பின் கொரோனா இரண்டாம் அலை காரணமாக பள்ளிகள் மூடப்பட்டு தற்போது ஜனவரி மாதம் 18-ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கவுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்  தெரிவித்துள்ளார்.

    கொரோனா தாக்கம் காரணமாக பல நாடுகளில் பள்ளிகள் மூடப்பட்டன. சில நாடுகள் பள்ளிகள் திறந்து வகுப்புகள் நடத்தி வரும் நிலையில், பாகிஸ்தானில் கொரோனா ஊரடங்கு காரணமாக மார்ச் மாதம் பள்ளிகள் மூடப்பட்டன. பல தளர்வுகளுக்கு பின் பாகிஸ்தான் அரசு கடந்த ஜூன் மாதம் பள்ளிகளை திறந்தது. தொடர்ந்து வந்த கொரோனா பரவல் இரண்டாம் அலை காரணமாக பள்ளிகள் மூடப்பட்டன.

    அதன் பிறகு செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி முதல் தொற்று பரவல் குறைந்த நிலையில் 9 மற்றும் அதற்கு மேற்பட்ட வகுப்புகளில் பயிலும் மாணவர்களுக்கு பள்ளிகள் செயல்படத் தொடங்கியுள்ளன. பின்னர் பள்ளிகள் மூலமாக பரவல் அதிகரிக்க தொடங்கியதால் அப்போதும் மூடப்பட்டன.

    மேலும் படிக்க... அரசு தரும் ரூ.2,500 பொங்கல் பரிசு டாஸ்மாக் மூலம் திரும்பவும் அரசுக்கே வரும்: அமைச்சர் சீனிவாசன் (வீடியோ)

    இந்நிலையில், பாகிஸ்தான் கல்வித்துறை அமைச்சர் ஷப்கத் மஹ்மூத் முதல் கட்டமாக 9 முதல் 12ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு ஜனவரி 18ஆம் தேதியும், இரண்டாம் கட்டமாக ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு ஜனவரி 25ஆம் தேதியும் பள்ளிகள் திறக்கப்படும் எனத் தெரிவித்தார். மேலும், உயர்கல்வி நிறுவனங்கள் பிப்ரவரி 1ஆம் தேதி முதல் செயல்படும் எனக் கூறினார்.



    உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Pakistan Government Officer, School Reopen

    அடுத்த செய்தி