இந்திய விமானப் படையில் ரஃபேல் போர் விமானங்கள் இணைக்கபட்டுள்ளதால், அதற்கு போட்டியாக சீனாவிடமிருந்து J-10C ரக போர் விமானங்களை கொள்முதல் செய்ய பாகிஸ்தான் முடிவெடுத்துள்ளது. ஆனால் சீன போர் விமானங்கள் ரஃபேல் அளவுக்கு திறன் பெற்றவை கிடையாது என பாகிஸ்தான் எதிர்கட்சி எம்.பி ஒருவர் பகிரங்கமாக பேசியிருக்கிறார்.
பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ஷேக் ரஷீத் அகமது, ராவல்பிண்டியில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த போது, அடுத்த ஆண்டு மார்ச் 23ம் தேதியன்று நடைபெறவிருக்கும் பாகிஸ்தான் தேசிய தின நிகழ்ச்சியில், 25 முழு திறன் பெற்ற சீனாவின் மல்டிரோல் J-10C ரக போர் விமானங்கள் இடம்பெறும் என தெரிவித்தார். பிரான்ஸிடம் இருந்து அதிநவீன ரஃபேல் போர் விமானங்களை இந்தியா கொள்முதல் செய்ததற்கு போட்டியாக பாகிஸ்தான், தனது ஆதரவு நாடான சீனாவிடம் இருந்து J-10C ரக போர் விமானங்களை வாங்க இருக்கிறது.
அமைச்சர் ஷேக் ரஷீத் அகமது பேசியதாவது, “பாகிஸ்தான் தேசிய தின விழாவில் கலந்து கொள்ள முதல் முறையாக விஐபி விருந்தினர்கள் வருகை தர இருக்கிறார்கள். இந்தியாவின் ரஃபேலுக்கு போட்டியாக சீனாவின் J-10C ரக விமானங்களை இணைக்கும் நிகழ்வு நடைபெற இருக்கிறது.” என தெரிவித்தார்.
Also read: 2021ல் விலையேற்றம் அடைந்தவை.. தக்காளி முதல் சிலிண்டர் வரை.
கடந்த ஆண்டு சீனா - பாகிஸ்தான் கூட்டு ராணுவ பயிற்சி நடைபெற்ற போது அதில் J-10C போர் விமானங்கள் இடம்பெற்றன. J-11B jets, KJ-500, Y-8 electronic warfare விமானங்களுடன் சீனா கலந்து கொண்ட போது, பாகிஸ்தான் JF-17 மற்றும் Mirage III ரக விமானங்களுடன் பங்கெடுத்தது.
பாகிஸ்தான் விமானப்படையில் அதிநவீன போர் விமானங்களாக கருதப்படுபவை அமெரிக்காவின் F-16 ரக விமானங்களே. இருப்பினும் இந்திய விமானப் படையில் பிரான்சின் அதிநவீன ரஃபேல் ரக போர் விமானங்கள் இணைக்கப்பட்ட பின்னர் தனது படையை மேலும் பலப்படுத்த பாகிஸ்தான் முடிவெடுத்தது.
Also read: இந்து கோவில்களை மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்க விரைவில் சட்டம் - கர்நாடக முதல்வர்
இந்த நிலையில் சீனாவின் J-10C ரக போர் விமானங்களை வாங்குவததால் எந்த பயனும் இருக்கப்போவதில்லை என எதிர்கட்சியைச் சேர்ந்த எம்.பி அஃப்னான் உல்லா கான் தெரிவித்துள்ளார். J-10C ரக விமானங்கள் தற்போது பாகிஸ்தான் கையிருப்பில் உள்ள F-16 விமானங்களுக்கு இணையானவை. J-10C விமானங்கள் ரஃபேலுக்கு இணையானவை கிடையாது. இந்த கொள்முதலுக்கு பதிலாக Azm திட்டம் அல்லது JF-17 ரக போர் விமானங்களை மேம்படுத்துவது போன்ற பணிகளில் நிதியை முதலீடு செய்யலாம் என ஆதங்கம் தெரிவித்துள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: China, Pakistan Army, Rafale deal, Rafale jets, Rafale war flight