Home /News /international /

நட்புறவை விரும்புவதால் பாகிஸ்தானை பலவீனமாக கருதக்கூடாது - இம்ரான் கான்

நட்புறவை விரும்புவதால் பாகிஸ்தானை பலவீனமாக கருதக்கூடாது - இம்ரான் கான்

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்

  • News18
  • Last Updated :
    இந்தியாவுடன் நட்புறவை விரும்புவதால், பாகிஸ்தானை பலவீனமான நாடாக கருதக் கூடாது என அந்நாட்டின் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.

    இந்தியாவுடன் அமைதிப் பேச்சுவார்த்தை மீண்டும் தொடர வேண்டும் என இம்ரான் கான் விருப்பம் தெரிவித்திருந்த நிலையில், பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சரை, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் இடையேயான சந்திப்பு அமெரிக்காவில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

    ஆனால், காஷ்மீரில் பயங்கரவாதிகளால் 3 போலீசார் கடத்தி கொல்லப்பட்டதை தொடர்ந்து பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டதாக இந்தியா தரப்பில் அறிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து, பேச்சுவார்த்தை விவகாரத்தில் இம்ரான் கான் அவசரப்பட்டதாக அந்நாட்டு எதிர்க்கட்சிகள் விமர்சித்தன.

    இந்நிலையில், லாகூரில் செய்தியாளர்களிடம் பேசிய இம்ரான் கான், இந்திய தலைவர்கள் பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்த முன் வருவார்கள் என நம்புவதாக தெரிவித்தார். நட்புறவை விரும்பும் பாகிஸ்தானை பலவீனமாக நினைத்து விடக் கூடாது என்றும் அவர் கூறினார். மேலும் நட்புறவு ஏற்படுவதும் இருநாட்டு மக்களுக்கும் நன்மை உண்டாக்கும் என்றும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்தார்.
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Imran khan, India, Indo-Pak peace talks, Kashmir, Pakistan News in Tamil, PM Imran Khan

    அடுத்த செய்தி