முகப்பு /செய்தி /உலகம் / சொந்த நாட்டு பிரதமரையே அசிங்கப்படுத்திய பாகிஸ்தான் தூதர் - இம்ரான் கானுக்கு தலைகுனிவு

சொந்த நாட்டு பிரதமரையே அசிங்கப்படுத்திய பாகிஸ்தான் தூதர் - இம்ரான் கானுக்கு தலைகுனிவு

பாகிஸ்தானில் இம்ரான் கான் ஆட்சி கவிழ்ந்தது

பாகிஸ்தானில் இம்ரான் கான் ஆட்சி கவிழ்ந்தது

செர்பியா நாட்டுக்கான பாகிஸ்தானின் தூதரகத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை கேலி செய்து வீடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

  • 1-MIN READ
  • Last Updated :

பாகிஸ்தான் பிரதமருக்கு சர்வதேச அளவில் தலைகுணிவை ஏற்படுத்தும் வகையில், பிரதமர் இம்ரான் கானை கலாய்த்து பாகிஸ்தான் நாட்டின் அயல்நாட்டு தூதர் ஒருவர் ட்விட்டரில் பதிவிட்டிருப்பது அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

பாகிஸ்தான் அரசு கடுமையான நிதிநெருக்கடியில் சிக்கியிருப்பதாக கூறப்படுகிறது. மேலும் அந்நாடு தீவிரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகளை எடுக்காததால் பாரிசை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் எப்.ஏ.டி.எஃப் அமைப்பு பாகிஸ்தானை கடந்த 2018ம் ஆண்டு முதல் கிரே பட்டியலில் (மோசமான பிரிவு) வைத்துள்ளது. இதன் காரணமாக சர்வதேச நிதியம், உலக வங்கி போன்ற அமைப்புகளிடமிருந்து அந்நாட்டுக்கு நிதி உதவி கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாகவே பாகிஸ்தானில் கடுமையான நிதி நெருக்கடி ஏற்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. மேலும் அந்நாடு அன்றாட செலவுகளை சமாளிக்கவே பெரும் அவஸ்தைப்படுவதாக கூறப்படுகிறது. இதனிடையே விலைவாசியும் கடுமையாக அதிகரித்திருப்பதால் அந்நாட்டு மக்களும் சிரமப்படுகின்றனர்.

இதனிடையே செர்பியா நாட்டுக்கான பாகிஸ்தானின் தூதரகத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை கேலி செய்து வீடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் இம்ரான் கான் பேசிய பேச்சுக்கள் கிண்டலடிக்கப்பட்டுள்ளன.

Also read:  பெண்கள் புகைப்பிடிப்பதால் விவாகரத்துகள் அதிகரிக்கின்றன - பெண் எம்.பி சர்ச்சை பேச்சு

அந்த வீடியோ பதிவில் கூறப்பட்டிருப்பதாவது,

“பணவீக்கம் இதற்கு முந்தைய அனைத்து சாதனைகளையும் முறியடித்திருக்கும் நிலையில், கடந்த 3 மாதங்களாக ஊதியம் வழங்கப்படாமல் அரசு அதிகாரிகளான நாங்கள் அமைதியாக இருந்து உங்களுக்காக பணிபுரிவோம் என நீங்கள் எவ்வளவு காலம் எதிர்பார்க்கிறீர்கள் இம்ரான் கான். பள்ளிக் கட்டணம் செலுத்தாததால் எங்கள் குழந்தைகள் பள்ளியை விட்டு வெளியேற்றப்பட்டனர். இது தான் புதிய பாகிஸ்தானா?”

Tweet

எங்களை மன்னித்துவிடுங்கள். எங்களுக்கு வேறு வழி தெரியவில்லை என மற்றொரு பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செர்பியா நாட்டுக்கான பாகிஸ்தான் தூதரகத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் அந்நாட்டின் பிரதமரையே கேலி செய்து வீடியோ வெளியிடப்பட்ட விவகாரம் சர்வதேச அளவில் இம்ரான் கானுக்கு தலைகுணிவை ஏற்படுத்தியிருப்பதாக கருதப்படுகிறது.

இதற்கிடையே ட்விட்டரில் இப்படியொரு பதிவு வெளியானதால் இம்ரான் அரசாங்கம் அதிர்ச்சியடைந்திருக்கிறது. செர்பியா தூதரக அதிகாரப்பூர்வ கணக்கு ஹேக் செய்யப்பட்டதாக தகவல் வெளியானாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை..

First published:

Tags: PM Imran Khan, Serbia