Home /News /international /

''பாகிஸ்தான் எதிர்காலத்தை வெளிநாட்டினர் தீர்மானிக்க கூடாது'' : இம்ரான் கான் ஆவேசம்

''பாகிஸ்தான் எதிர்காலத்தை வெளிநாட்டினர் தீர்மானிக்க கூடாது'' : இம்ரான் கான் ஆவேசம்

பாகிஸ்தானில் இம்ரான் கான் ஆட்சி கவிழ்ந்தது

பாகிஸ்தானில் இம்ரான் கான் ஆட்சி கவிழ்ந்தது

நாடாளுமன்றத்தை கலைப்பதற்கு நான் குடியரசுத் தலைவருக்கு பரிந்துரை செய்துள்ளேன். இனி எல்லோரும் மக்களிடம் செல்வோம். அவர்கள் முடிவு செய்யட்டும். - இம்ரான் கான்

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் நாட்டின் பாதுகாப்பு கருதி நிராகரிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய தேர்தலுக்கு அழைப்பு விடுத்துள்ள இம்ரான் கான், நாட்டின் எதிர்காலத்தை பாகிஸ்தானியர்களே தீர்மானிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

342 பேர் கொண்ட பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் இம்ரான் கானின் தெஹ்ரீக் ஏ இன்சாப் மற்றும் அதன் கூட்டணி அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதன் மீதான வாக்கெடுப்பு இன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

முன்னதாக, இம்ரான் கானுக்கு பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் போதிய பெரும்பான்மை இல்லை என்று தகவல்கள் வெளியான நிலையில் அரசை கவிழ்க்க தேச பாதுகாப்பு கருதி நம்பிக்கையில்லா தீர்மானம் நிராகரிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க - இம்ரான் கானுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் நிராகரிப்பு... நாடாளுமன்றத்தை கலைக்க பரிந்துரை


இன்றைய பாகிஸ்தான் நாடாளுமன்ற நிகழ்வின்போது, எதிர்க்கட்சியினர் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தை துணை சபாநாயகர் காசிம் சூரி நிராகரித்தார். இதன்பின்னர் பாகிஸ்தான் பொதுமக்களுக்கு இம்ரான் கான் தொலைக்காட்சி வழியே உரையாற்றினார்.


அப்போது பேசிய அவர், ‘பாகிஸ்தானின் எதிர்காலத்தை பாகிஸ்தானியர்கள்தான் தீர்மானிக்க வேண்டும். வெளிநாட்டவர் தீர்மானிக்க கூடாது. மக்கள் தேர்வு செய்த பிரதிநிதிகளை பணம் கொடுத்து வாங்கியதால்தான் நாடு இந்த நிலைமைக்கு வந்துள்ளது. இதற்கு செலவு செய்த நிதியை வேறு ஏதாவது நல்ல காரியத்திற்கு செலவு செய்யலாம்.

இதையும் படிங்க - கிரிக்கெட் வீரராக வாழ்க்கையை தொடங்கி பாகிஸ்தான் பிரதமராக உயர்ந்த இம்ரான் கான்...


புதிய தேர்தலுக்கு தயாராக இருக்குமாறு நாட்டு மக்களை நான் கேட்டுக் கொள்கிறேன். நாட்டின் எதிர்காலத்தை பாகிஸ்தான் மக்களே தீர்மானிக்கட்டும். வெளிநாட்டவரோ அல்லது ஊழல் அரசியல்வாதிகளோ தீர்மானிக்க கூடாது.


நாடாளுமன்றத்தை கலைப்பதற்கு நான் குடியரசு தலைவருக்கு பரிந்துரை செய்துள்ளேன். இனி எல்லோரும் மக்களிடம் செல்வோம். அவர்கள் முடிவு செய்யட்டும்’ என்று தெரிவித்தார்.
Published by:Musthak
First published:

Tags: Imran khan

அடுத்த செய்தி