• HOME
  • »
  • NEWS
  • »
  • international
  • »
  • கட்டிபிடிப்பது, படுக்கையறை, காதல் ஜோடிகளின் நெருக்கமான காட்சிகளை டிவி சேனல்கள் ஒளிபரப்ப தடை!

கட்டிபிடிப்பது, படுக்கையறை, காதல் ஜோடிகளின் நெருக்கமான காட்சிகளை டிவி சேனல்கள் ஒளிபரப்ப தடை!

TV Serials

TV Serials

கட்டிப்பிடிப்பது, கள்ளத்தொடர்பு, அறுவறுப்பான ஆடை அணிவது, படுக்கையறைக் காட்சிகள், காதல் ஜோடிகளின் தனிப்பட்ட காட்சிகள், பிற தவறான காட்சிகளை எதுவுமே நம் நாட்டின் கலாச்சாரத்துக்கு பொருந்தாதவை.

  • Share this:
டிவி சேனல்கள் இனி கட்டிப்பிடிப்பது, வருடுவது போன்ற காட்சிகளை ஒளிபரப்ப கூடாது என்று பாகிஸ்தான் மின்னணு ஊடக ஒழுங்குமுறை ஆணையம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

நாடகங்கள், சீரியல்களில் தான் இப்போதெல்லாம் கிளாமர் காட்சிகள் அதிகமாக இருப்பதாக தினமும் டிவி பார்க்கும் வீட்டில் உள்ள பெரியவர்கள் கூறுவதை கேட்க முடியும். அந்த அளவுக்கு காதல் காட்சிகள், முத்தக் காட்சிகள், கிளுகிளுப்பான காட்சிகளுக்கு பஞ்சம் இல்லை, பொதுவாக இது போன்ற காட்சிகள் வட இந்திய சீரியல்களில் தான் அதிகம் என்றாலும், அந்த கலாச்சாரம் தென்னிந்திய மொழி சீரியல்களுக்கும் பரவி வருகிறது. இது போன்ற சீரியல் காட்சிகளால் அதனை பார்க்கும் இளைஞர்கள், பெண்கள், பெரியவர்களுக்கு அசெளகரியம் ஏற்படுகிறது.

இந்தப் பிரச்னை பாகிஸ்தான் சீரியல்களுக்கும் பொதுவானது போலும். இனி இது போன்ற கட்டிப்பிடிக்கும், காதல் ரசம் சொட்ட சொட்ட வருடவது, படுக்கையறை காட்சிகளை டிவி சேனல்கள் ஒளிபரப்பக் கூடாது என பாகிஸ்தான் மின்னணி ஊடக ஒழுங்குறை ஆணையம் தடை விதித்துள்ளது.

Also read: லக்கிம்பூர்கேரியில் கொல்லப்பட்ட பாஜக பிரமுகரின் குடும்பத்தை சந்தித்ததற்காக விவசாயிகளின் போராட்ட குழு தலைவர் சஸ்பெண்ட்!

இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, நாகரிகமற்ற ஆடைகள் அணிவது, கட்டிப்பிடிப்பது, வருடுவது, படுக்கையறை காட்சிகள், இத்யாதி இத்யாதி சமாச்சாரங்கள் என ஏற்கத்தக்க வகையில் இல்லாதவற்றை ஒளிபரப்புவதால் பார்வையாளர்கள் மனரீதியில் துயரத்தை அனுபவிக்கிறார்கள், இவையெல்லாம் அநாகரிகமாக இருப்பதால் இனி பாகிஸ்தானில் டிவி சேனல்கள் இது போன்ற காட்சிகளை ஒளிபரப்ப கூடாது.

Also read:  மேற்குவங்கத்தில் ஒரே வாரத்தில் இரு மடங்காக உயர்ந்த கொரோனா பரவல்!

மேலும் இது போன்ற காட்சிகள், இஸ்லாமிய கோட்பாடுகளுக்கும், பாகிஸ்தானின் கலாச்சாரத்திற்கும் பொருந்ததாதவை. கட்டிப்பிடிப்பது, கள்ளத்தொடர்பு, அறுவறுப்பான ஆடை அணிவது, படுக்கையறைக் காட்சிகள், காதல் ஜோடிகளின் தனிப்பட்ட காட்சிகள், பிற தவறான காட்சிகளை எதுவுமே நம் நாட்டின் கலாச்சாரத்துக்கு பொருந்தாதவை. எனவே ஏற்கனவே ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள்/நாடகங்களில் இது போன்ற காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தால் அவற்றை எடிட் செய்து நாகரிகமான காட்சிகளை ஒளிபரப்புவது அல்லது நீக்கி விடுவது போன்ற நடவடிக்கைகளை பார்வையாளர் நலன் கருதி எடுக்க வேண்டும் என டிவி சேனல்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.

இதனை கருத்தில் கொண்டு டிவி சேனல்கள் தங்களின் கண்டெண்ட்களை அமைத்துக் கொள்ள வேண்டும் என அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Arun
First published: