• HOME
  • »
  • NEWS
  • »
  • international
  • »
  • பெண்ணின் ஆடைகளை கிழித்து, அந்தரத்தில் தூக்கிப் போட்டு அட்டகாசம் - பாகிஸ்தான் சுதந்திர தினத்தன்று பெண்ணுக்கு நேர்ந்த அவலம்!

பெண்ணின் ஆடைகளை கிழித்து, அந்தரத்தில் தூக்கிப் போட்டு அட்டகாசம் - பாகிஸ்தான் சுதந்திர தினத்தன்று பெண்ணுக்கு நேர்ந்த அவலம்!

sexual abuse

sexual abuse

நண்பர்கள் சிலருடன் Minar-e-Pakistan-ல் வீடியோ ஒன்றை அப்பெண் படமாக்கிக் கொண்டிருந்த போது திடீரென 400க்கும் மேற்பட்ட கும்பல் அந்த பெண்ணை கட்டிப்பிடித்து அநாகரீகமாக நடந்து கொண்டுள்ளனர்..

  • Share this:
பாகிஸ்தான் நாட்டின் சுதந்திர தினத்தை கடந்த ஆகஸ்ட் 14ம் தேதியன்று பாகிஸ்தானியர்கள் உற்சாகமாக கொண்டாடினர். அந்த நாளில் லாகூரில் அமைந்துள்ள Minar-e-Pakistan என்ற தேசிய நினைவுச் சின்னத்தில் பெண் டிக் டாக் பிரபலம் ஒருவர் 400க்கும் மேற்பட்டோரால் மானபங்கம் செய்யப்பட்டிருக்கிறார். அவரின் உடைகளை கிழித்து, அவரை அந்தரத்தில் தூக்கிப் போட்டு அவர்கள் செய்த அட்டகாசங்கள் அடங்கிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. இது ஒட்டுமொத்த பாகிஸ்தானையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

பெயர் கூற விரும்பாத அந்த பெண் அவரது டிக் டாக் வீடியோக்கள் மூலமாக பாகிஸ்தானில் பிரபலமாக அறியப்படுகிறார். அன்றைய தினம் தனது நண்பர்கள் சிலருடன் Minar-e-Pakistan-ல் வீடியோ ஒன்றை அப்பெண் படமாக்கிக் கொண்டிருந்த போது திடீரென 400க்கும் மேற்பட்ட கும்பல் அந்த பெண்ணை கட்டிப்பிடித்து அநாகரீகமாக நடந்து கொண்டுள்ளனர்.. அந்த கும்பலைச் சேர்ந்தவர்கள் அப்பெண்ணையும், அவரது நண்பர்களின் உடமைகளை களவாடியும், ஆடைகளை கிழித்தும் அட்டகாசம் செய்திருக்கின்றனர்.

Also Read: ஆயுதங்களுடன் வாசலில் நின்ற தாலிபான்கள்.. பதைபதைப்பில் இருந்த இந்தியர்கள் – திக் திக் நிமிடங்கள்

டிக் டாக் பிரபலமான அப்பெண்ணின் ஆடைகளை கிழித்து, அவரை பல முறை அந்தரத்தில் தூக்கிப் போட்டுள்ளனர். அதிர்ந்து போன அப்பெண் உதவிக்காக அழுதும் அங்கிருந்த ஒருவர் கூட அவருக்கு உதவவில்லை. அந்த கும்பலைச் சேர்ந்தவர்கள் அவருடைய தங்க ஆபரணங்களையும், மொபைல் போனையும் களவாடியிருக்கின்றனர்.

மேலும் அவரது நண்பர்களுக்கும் இதே கதி தான் ஏற்பட்டிருக்கிறது. நண்பர்களின் பாக்கெட்களில் இருந்த பணத்தையும் அவர்களின் உடமைகளையும் கூட அந்த கும்பலைச் சேர்ந்தவர்கள் கொள்ளையடித்துச் சென்றனர். திடீரென இத்தனை பேர் சூழ்ந்து கொண்டு அநாகரீகமாக, அட்டகாசமாக நடந்து கொண்டது அப்பெண்ணையும் அவரின் நண்பர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

Also Read: பைக் வந்தாச்சு.. ஓலா எலக்ட்ரிக் கார் சந்தைக்கு வருவது எப்போது தெரியுமா?

இந்த சம்பவத்தை சிலர் வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளத்தில் பரப்ப அது தேசிய அளவவில் ட்ரெண்ட் ஆனது. இந்த வீடியோ பரவிய நிலையில் இதனை பார்த்த பாகிஸ்தானியர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறும் வலியுறுத்தினர்.

இதனைத் தொடர்ந்து பிரதமர் இம்ரான் கானும், லாகூர் மாகாண முதல்வர் உஸ்மான் பஸ்தரும் இதில் தொடர்புடையவர்களை கைது செய்ய உத்தரவிட்டனர். பாதிக்கப்பட்ட பெண்ணும் இது தொடர்பாக காவல்நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார். அவருக்கு நேர்ந்த இந்த விஷயங்களை அவர் கண்ணீர் மல்க தெரிவித்தது காண்போரை கரையச் செய்வதாக இருந்தது. இதனிடையே இதில் தொடர்புடைய சுமார் 400 பேரை தற்போது காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

Also Read: அஷ்ரப் கனியை கைது செய்ய இண்டர்போலுக்கு கோரிக்கை வைத்த ஆப்கன் தூதரகம்!

இச்சம்பவம் தொடர்பாக பேசிய மரியா ஆமிர் என்ற பெண் ஊடகவியலாளர் ஒருவர், ஒரு பாலினத்தவர் மீது அடக்குமுறையை கட்டவிழ்த்துவிடுவது தான் நமக்கு கிடைத்த சுதந்திரமா? என கேள்வி எழுப்பியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அதே நேரத்தில் பாதிக்கப்பட்ட அந்த பெண் ஆபாசமாக சில காட்சிகளை படமாக்கிக் கொண்டிருந்ததாக ஒரு தரப்பினரால் சொல்லப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Arun
First published: