நிகழ்ச்சிக்கு மாணவிகளை அழைத்ததால் ஆத்திரம்... பேராசிரியரைக் கொன்ற மாணவர்...!

கொலையாளி காதீப் உசைன் தனிப்பட்ட காரணத்தால் கொலை செய்துள்ளதாகவும், இதற்கு பின்னாள் பயங்கரவாத அமைப்புகள் இல்லை என்று போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

Web Desk | news18
Updated: March 21, 2019, 6:51 PM IST
நிகழ்ச்சிக்கு மாணவிகளை அழைத்ததால் ஆத்திரம்... பேராசிரியரைக் கொன்ற மாணவர்...!
மாதிரிப்படம் (Image: Reuters)
Web Desk | news18
Updated: March 21, 2019, 6:51 PM IST
பிரிவு உபச்சார நிகழ்ச்சிக்கு மாணவிகளை அழைத்தது இஸ்லாமிய கோட்பாடுகளுக்கு எதிரானது என்று கூறி பேராசிரியர் ஒருவரை மாணவர் கொலை செய்த சம்பவம் பாகிஸ்தானில் நடந்துள்ளது.

பாகிஸ்தானின் பாகவல்பூர் என்ற பகுதியில் இருபாலர் பயிலும் அரசுக்கல்லூரி ஒன்று உள்ளது. இக்கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றும் கலீத் அமீத் என்பவர் சில மாதங்களில் பணியிலிருந்து ஓய்வு பெற இருக்கிறார். இதனை ஒட்டி பிரிவு உபச்சார விழா ஒன்றுக்கு அவர் ஏற்பாடு செய்துள்ளார்.

சக பேராசிரியர்கள், மாணவர்கள் மட்டுமின்றி மாணவிகளையும் அவர் நிகழ்ச்சிக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

Read Also... இந்திய மசூதிகளிலும் தாக்குதல் நடத்த வேண்டும்... பேஸ்புக் கமெண்டால் பறிபோன வேலை

ஆனால், அங்கு பெண்களுக்கென இஸ்லாமிய சட்டங்கள், விதிகள் உள்ள நிலையில், பேராசிரியர் மாணவிகளை நிகழ்ச்சிக்கு அழைத்தது குற்றம் என்று கருதிய காதீப் உசைன் என்ற மாணவர், நிகழ்ச்சியின் போது பேராசிரியர் கலீத் அகமதை குத்திக் கொலை செய்துள்ளார்.

கொலையாளி காதீப் உசைன் தனிப்பட்ட காரணத்தால் கொலை செய்துள்ளதாகவும், இதற்கு பின்னாள் பயங்கரவாத அமைப்புகள் இல்லை என்று போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Loading...
தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.

Also See...

First published: March 21, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...