டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக பாகிஸ்தானிலிருந்து ஒரு குரல்!
புதிய வேளாண் மசோதாக்களுக்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டத்தில் இதுவரை 70க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

ஜவாத் அகமது
- News18
- Last Updated: January 12, 2021, 6:14 PM IST
டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக பாகிஸ்தான் பாடகர் ஒருவர் பாடியுள்ள பாடல் இணையத்தில் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
புதிய வேளாண் சட்டங்களை திரும்பப்பெறக்கோரி இரண்டு மாதங்களுக்கும் மேலாக டெல்லி - பஞ்சாப் எல்லையில் விவசாயிகள் தொடர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பல்வேறு வடிவங்களில் தங்களின் தொடர் போராட்டத்தை முன்னெடுத்து வரும் விவசாயிகள், குடியரசு தினவிழா அன்று டெல்லியை நோக்கி டிராக்டர் அணிவகுப்பு நடத்தவும் திட்டமிட்டுள்ளனர். வேளாண் சட்டங்களை திரும்பபெறும் வரை போராட்டத்தைக் கைவிட மாட்டோம் என திட்டவட்டமாக தெரிவித்துள்ள அவர்கள், கடும் குளிரையும் பொருட்படுத்தாது நெடுஞ்சாலைகளில் தற்காலிக குடில் அமைத்து தங்கியுள்ளனர்.
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாய சங்க பிரதிநிதிகளுடன் மத்திய அரசு நடத்திய பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகளும் தோல்வியில் முடிந்துள்ளது. தங்களின் குரலுக்கு செவி சாய்க்காத மத்திய அரசை எதிர்த்து, நடத்தப்படும் போராட்டத்தை அடுத்தகட்டத்துக்கு நகர்த்தவும் விவசாயிகள் முடிவு செய்துள்ளனர். விவசாயிகளின் தொடர்போராட்டம் உலகளாவிய கவனத்தையும் பெற்றுள்ளது. பஞ்சாப் திரைத்துறையைச் சேர்ந்த பலரும் விவசாயிகளின் போராட்டத்துக்கு நேரடியாக சென்று ஆதரவு தெரிவித்தனர். பிரபல பாலிவுட் நடிகையான பிரியங்கா சோப்ரா (Priyanka Chopra), ஸ்வரா பாஸ்கர் (Swara Bhasker) உள்ளிட்டோரும் தங்களின் ஆதரவை தெரிவித்துள்ளனர். மேலும் சில பாலிவுட் நட்சத்திரங்கள் விவசாயிகளுக்காக குரல் கொடுத்துள்ள நிலையில், பாகிஸ்தான் பாடகர் ஜாவத் அகமத்தும் (Jawad Ahmad) தன்னுடைய ஆதரவை தெரிவித்துள்ளார். விவசாயிகளுக்காக, "கிசானா" (KISANA) என்ற பாடலை உருவாக்கியுள்ளஅவர், தனது யூ டியூப் (Youtube) பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த பாடல் இணையத்தில் கவனத்தைப் பெற்றுள்ளது.
அதில், நீதிபதியானாலும், காவல்துறை அதிகாரியானாலும் அனைவருக்கும் உணவளிப்பது விவசாயிகள் மட்டுமே, அவர்கள் தான் அதிகாரமிக்கவர்கள், மற்றவர்கள் எல்லாம் சேவகர்கள் என எழுதியுள்ளார். தங்களின் உரிமைக்காக விவசாயிகள் இவ்வளவு நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டிருப்பது உண்மையிலேயே மெய்சிலிர்க்க வைப்பதாகவும், அவர்களின் குரலுக்கு உடனடியாக செவிமடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். Also read... ஒபாமாவின் இந்திய பயணம் - ரகசியங்களை உடைத்த முன்னாள் குடியரசுத்தலைவர் பிராணாப் முகர்ஜியின் புத்தகம்!
மேலும், தான் ஒரு இந்தியர் என தெரிவித்துள்ள ஜாவத் அகமது, பாகிஸ்தானை நேசிப்பதாக கூறியுள்ளார். இந்தியாவைப்போல் பாகிஸ்தானிலும் விவசாயிகளின் நிலைமை கவலையளிப்பதாகவும் அவர் தெரிவித்தார். மேலும், " சீக்கிய தோழர்களே Zindabad! பாகிஸ்தானில் இருந்து உங்களுக்கான அன்பு" என்றும் ஜாவத் அகமது கூறியுள்ளார். இதேபோல், கிழக்கு பஞ்சாப்பை சேர்ந்த மற்றொரு யூ டியூபர் குருவாலி சிங் (Gurvail Singh ) என்பவரும் விவசாயிகளுக்காக தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.
புதிய வேளாண் மசோதாக்களுக்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டத்தில் இதுவரை 70க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
புதிய வேளாண் சட்டங்களை திரும்பப்பெறக்கோரி இரண்டு மாதங்களுக்கும் மேலாக டெல்லி - பஞ்சாப் எல்லையில் விவசாயிகள் தொடர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பல்வேறு வடிவங்களில் தங்களின் தொடர் போராட்டத்தை முன்னெடுத்து வரும் விவசாயிகள், குடியரசு தினவிழா அன்று டெல்லியை நோக்கி டிராக்டர் அணிவகுப்பு நடத்தவும் திட்டமிட்டுள்ளனர். வேளாண் சட்டங்களை திரும்பபெறும் வரை போராட்டத்தைக் கைவிட மாட்டோம் என திட்டவட்டமாக தெரிவித்துள்ள அவர்கள், கடும் குளிரையும் பொருட்படுத்தாது நெடுஞ்சாலைகளில் தற்காலிக குடில் அமைத்து தங்கியுள்ளனர்.
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாய சங்க பிரதிநிதிகளுடன் மத்திய அரசு நடத்திய பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகளும் தோல்வியில் முடிந்துள்ளது. தங்களின் குரலுக்கு செவி சாய்க்காத மத்திய அரசை எதிர்த்து, நடத்தப்படும் போராட்டத்தை அடுத்தகட்டத்துக்கு நகர்த்தவும் விவசாயிகள் முடிவு செய்துள்ளனர். விவசாயிகளின் தொடர்போராட்டம் உலகளாவிய கவனத்தையும் பெற்றுள்ளது. பஞ்சாப் திரைத்துறையைச் சேர்ந்த பலரும் விவசாயிகளின் போராட்டத்துக்கு நேரடியாக சென்று ஆதரவு தெரிவித்தனர்.