கணவரின் மூன்றாவது திருமணம்... மண்டபத்திற்கே வந்து வெளுத்த முதல் மனைவி...! - வீடியோ

கணவரின் மூன்றாவது திருமணம்... மண்டபத்திற்கே வந்து வெளுத்த முதல் மனைவி...! - வீடியோ
  • News18
  • Last Updated: February 13, 2020, 1:19 PM IST
  • Share this:
மூன்றாவது திருமணத்திற்கு தயாராகிக்கொண்டிருந்த மாப்பிள்ளையை, முதல் மனைவி மண்டபத்திற்கே வந்து தாக்கிய சம்பவம் பாகிஸ்தானில் அரங்கேறியுள்ளது.

பாகிஸ்தான் கராச்சியைச் சேர்ந்த ரபிக் என்பவருக்கு திருமண ஏற்பாடுகள் மண்டபத்தில் நடந்துகொண்டிருந்தது. திருமண வரவேற்புக்காக மணமகன் மற்றும் மணப்பெண்ணின் உறவினர்கள் தயாராகிக் கொண்டிருந்தனர்.

இந்நிலையில் மதிஹா என்ற பெண் தன் உறவினர்களுடன் வேக வேகமாகத் திருமண மண்டபத்திற்குள் வந்து மணமகனை இழுத்துப் போட்டு அடிக்க துவங்கினர். அவருடன் வந்த உறவினர்களும் மணமகனை அடித்தனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.


பின்னர் அவர்கள் மதிஹாவையும் அவரது உறவினர்களையும் தடுத்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் வந்து என்ன நடக்கிறது என விசாரித்த போது, மாப்பிள்ளையை அடித்தது அவரின் முதல் மனைவி என்பது தெரியவந்தது.

மதிஹாவை திருமணம் செய்துவிட்டு அவருக்குத் தெரியாமல் ரபிக் ஏற்கனவே இரண்டாவது திருமணமும் செய்துள்ளார். பின்னர் அதற்காக மதிஹாவிடம் வந்த மன்னிப்பு மதிஹாவுடனே வாழ விரும்புவதாக வந்தார் எனவும். பின்னர் மீண்டும் தற்போது மதிஹாவிற்கு தெரியாமல் மூன்றாவது திருமணத்திற்கு அவர் தயார் ஆனதால் ஆத்திரத்தில் உறவினர்களுடன் வந்து தாக்கியதாக தெரிவித்துள்ளார்.

இதனை அடுத்து, மஹிதாவை நீதிமன்றத்தில் சென்று அணுகுமாறு கூறிய போலீசார், ரபிக்கை தாக்கியதற்காக மஹிதாவின் உறவினர்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
First published: February 13, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading