Home /News /international /

பாகிஸ்தான் கடைவீதியில் குண்டுவெடிப்பு; மூவர் பலி, பலர் காயம்

பாகிஸ்தான் கடைவீதியில் குண்டுவெடிப்பு; மூவர் பலி, பலர் காயம்

Lahore Blast

Lahore Blast

Lahore Blast: இந்த கோர சம்பவத்தில் குழந்தை உட்பட மூன்று பேர் உடல் சிதறி உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது. மேலும் 22 பேர் காயமடைந்தனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் உள்ள லாகூரில் பயங்கர குண்டுவெடிப்பு நிகழ்ந்ததில் 3 பேர் உயிரிழந்தனர். 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

    பாகிஸ்தானின் லாகூரில் உள்ள லோஹரி கேட் பகுதியானது கோட்டை மதில் சுவர்களால் ஆன பழம்பெருமை வாய்ந்த ஒரு பகுதியாகும். இங்குள்ள லோஹரி பஜார், தெற்காசியாவின் பழமையான சந்தைகளில் ஒன்றாக திகழ்கிறது. இந்நிலையில் மக்கள் நெருக்கடி அதிகம் கொண்ட இந்த மார்க்கெட் பகுதியில் இன்று திடீரென குண்டுவெடிப்பு நிகழ்ந்தது.

    குண்டுவெடிப்பு சம்பவத்தால் அருகாமையில் இருக்கக் கூடிய கடைகள், கட்டிடங்களின் ஜன்னல்கள் அதிர்ந்தன. அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனங்கள் சேதம் அடைந்தன. இந்த திடீர் குண்டுவெடிப்பால் ஒன்றரை அடி அளவு ஆழம் ஏற்பட்டுள்ளது.

    Also read:  கர்ப்பிணி வனத்துறை அதிகாரியின் முடியை பிடித்து இழுத்து தரையில் போட்டு கொடூர தாக்குதல் - வீடியோ

    இந்த கோர சம்பவத்தில் குழந்தை உட்பட மூன்று பேர் உடல் சிதறி உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது. மேலும் 22 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மாயோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 4 பேரின் உடல்நிலை ஆபத்தான கட்டத்தில் இருப்பதாகவும், அவர்களின் உயிரை காப்பாற்ற மருத்துவர்கள் தீவிர சிகிச்சையளித்துவருவதாகவும் தெரியவந்துள்ளது./

    இதே போல, மார்க்கெட் பகுதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தில் பொருத்தப்பட்டிருந்த டைம் பாம் வகை வெடிகுண்டு வெடித்து சிதறியதாக முதல்கட்ட விசாரணை மூலம் தெரியவந்திருப்பதாக லாகூர் காவல்துறை செய்தித்தொடர்பாளர் ராணா ஆரிஃப் தெரிவித்துள்ளார்.

    இதுவரை இந்த குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. இருப்பினும் இது போன்ற சம்பவங்களை ஏற்கனவே பாகிஸ்தான் தாலிபான் அமைப்பான Tehreek-e-Taliban Pakistan (TTP) நடத்தியிருப்பதாகவும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

    இந்த சம்பவம் குறித்து லாகூர் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

     
    Published by:Arun
    First published:

    Tags: Bomb blast

    அடுத்த செய்தி