ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் கைப்பற்றியது முதல், அந்நாட்டில் பாகிஸ்தானின் தலையீடு அதிகரித்துள்ளது. பாகிஸ்தானின் நிர்ப்பந்தத்தின் பேரிலேயே, ஹக்கானி பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்தவர்களுக்கு உயர் பதவிகள் வழங்கப்பட்டுள்ளன. ஆப்கன் பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் வகையில், அந்நாட்டுனான வர்த்தகம் பாகிஸ்தானின் நாணயமான ரூபாய் மதிப்பிலேயே நடத்தப்படும் என அறிவித்தது. இதுவரை இருநாடுகளுக்கும் இடையேயான வர்த்தகம் அமெரிக்க டாலர்களில் நடைபெற்று வந்தது.
இந்நிலையில் ஆப்கனின் வகைப்படுத்தப்பட்ட முக்கிய ஆவணங்களை பாகிஸ்தான் எடுத்துச் சென்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மனிதாபிமான உதவிகளுடன் காபூலுக்கு வந்த மூன்று C170 விமானங்கள் திரும்பிச் சென்றபோது, ஆப்கனுக்கான தூதர் மன்சூர் அகமதுவின் மேற்பார்வையில் முக்கிய ஆவணங்களை எடுத்துச் சென்றதாக கூறப்படுகிறது. அவை அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகனின் பாதுகாக்கப்பட்ட ஆவணங்கள் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
இவற்றை பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ அமைப்பு பயன்படுத்திக் கொள்ளப்படும் என்றும் கூறப்படுகிறது. பாதுகாப்புக்கு பெறும் அச்சுறுத்தலாகவும் பார்க்கப்படுகிறது. மேலும் ஆப்கானிஸ்தான் பாகிஸ்தானையே சார்ந்திருக்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது.
இதனிடையே ஆப்கன் அதிபர் என்று தன்னை தானே அறிவித்துக் கொண்ட அம்ருல்லா சாலேவின் மூத்த சகோதரரான ரோகுல்லா சாலேயை தாலிபான்கள் கொடூரமாக கொலை செய்துள்ளனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
சாலேவின் சொந்த மாகாணமான பஞ்ச்ஷீரில் தாலிபான்களுக்கும், எதிர்ப்பு படைகளுக்கும் இடையே தொடர்ந்து சண்டை நடந்து வருகிறது. அப்போது அவரை சிறைப்பிடித்த தாலிபான்கள் சித்ரவதை செய்து பின்னர் கொன்றுள்ளனர். அவரது உடலையும் குடும்பத்தினரிடம் ஒப்படைக்க தாலிபான்கள் மறுத்து விட்டதாக கூறப்படுகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Pakistan Army