• HOME
  • »
  • NEWS
  • »
  • international
  • »
  • இந்திய விமானப்படை தாக்குதல் விவகாரம்: ஐ.நாவிடம் முறையிட பாகிஸ்தான் முடிவு!

இந்திய விமானப்படை தாக்குதல் விவகாரம்: ஐ.நாவிடம் முறையிட பாகிஸ்தான் முடிவு!

இம்ரான் கான்

இம்ரான் கான்

12 மிராஜ் ரக விமானங்கள் மூலம் 1,000 கிலோ வெடிகுண்டு தீவிரவாதிகள் முகாம் மீது வீசப்பட்டு அவை முற்றிலும் அழிக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

  • News18
  • Last Updated :
  • Share this:
    இந்தியா விமானப்படை மூலம் தாக்குதல் நடத்திய விவகாரம் தொடர்பாக ஐ.நாவை நாடுவதற்கு பாகிஸ்தான் முடிவெடுத்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

    காஷ்மீர் மாநிலம் புல்வாமா பகுதியில் இந்திய பாதுகாப்பு படைகள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய விவகாரம் இந்தியாவில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்தநிலையில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பால்கோட், சகோதி, முஸாபராபாத் ஆகிய இடங்களில் இன்று காலை 3.30 மணி நுழைந்த இந்திய விமானப்படை விமானம் அதிரடி தாக்குதலை நடத்தியது. 12 மிராஜ் ரக விமானங்கள் மூலம் 1,000 கிலோ வெடிகுண்டு தீவிரவாதிகள் முகாம் மீது வீசப்பட்டு அவை முற்றிலும் அழிக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

    இந்த விவகாரம் தொடர்பாக, பாகிஸ்தானில் உயர்மட்டக் குழு கூட்டம் நடைபெற்றது. பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், அந்நாட்டு ராணுவ தளபதி கமர் ஜாவத் பஜ்வா உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர் என்று அந்நாட்டு செய்தி நிறுவனத்தில் செய்திகள் வெளியாகியுள்ளது.

    இந்தக் கூட்டத்தில் எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டைத் தாண்டி தாக்குதல் நடத்தி இந்தியா விதிமுறைகளை மீறியுள்ளது. இதுதொடர்பாக, இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்புகள், ஐக்கிய நாடுகள் சபை, நட்பு நாடுகளிடம் புகார் அளிக்கலாம் என்று முடிவு செய்துள்ளனர் என்று அந்நாட்டு ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Karthick S
    First published: