முகப்பு /செய்தி /உலகம் / அணு ஆயுத திறனை வலுப்படுத்தும் பாகிஸ்தான் - அமெரிக்க உளவுத்துறை எச்சரிக்கை

அணு ஆயுத திறனை வலுப்படுத்தும் பாகிஸ்தான் - அமெரிக்க உளவுத்துறை எச்சரிக்கை

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

2019 பிப்ரவரி புல்வாமா பயங்கரவாத தாக்குதலுக்குப் பின்னர் இந்தியா பாகிஸ்தான் உறவு மோசமடைந்துள்ளது என அமெரிக்க உளவுத்துறை தெரிவித்துள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

பாகிஸ்தான் தனது ராணுவத்தை தொடர்ந்து நவீனப்படுத்தி அதன் அணு ஆயுத திறனை தொடர்ந்து வலுப்படுத்திக் கொண்டிருக்கும் என அமெரிக்க உளவுத்துறை உயர் அலுவலர் ஸ்காட் பேரியர் தெரிவித்துள்ளார். அமெரிக்க மேலவையில் அமெரிக்க ஆயுதப்படை தொடர்பான கூட்டம் நடைபெற்றது. இதில் உளவுத்துறை அதிகாரியான லெப்டினன்ட் ஜெனரல் ஸ்காட் பேரியர் பங்கேற்று முக்கிய கருத்துக்களை தெரிவித்துள்ளார். இதில் இந்தியா - பாகிஸ்தான் உறவு குறித்து முக்கிய கருத்தை தெரிவித்துள்ளார்.

அவர் கூறியதாவது, இந்தியா-பாகிஸ்தான் இடையேயான அசாதாரண சூழல் எதிர்வரும் காலத்திலும் தொடர்ந்து நிலவும். 2019 பிப்ரவரி புல்வாமா பயங்கரவாத தாக்குதலுக்குப் பின்னர் இந்தியா பாகிஸ்தான் உறவு மோசமடைந்துள்ளது. தொடர்ந்து காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கம் செய்யப்பட்டதும் நிலைமையை கூடுதலாக சிக்கலுக்கு உள்ளாக்கியுள்ளது. அதேவேளை 2021ஆம் ஆண்டு பிப்ரவரிக்குப் பின் இரு நாடுகளுக்கும் இடையே போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டு, எல்லையில் தாக்குதல் குறைந்துள்ளது.

அதேவேளை, இரு நாடுகளுக்கும் இடையே பேச்சு வார்த்தை மூலம் எந்தவிதமான தீர்வும் எட்டப்படவில்லை. இந்தியா மீதான அச்சம் காரணமாக பாகிஸ்தான் தனது ராணுவத்தை தொடர்ந்து நவீனமாக மாற்றிக்கொள்ளும். அத்துடன் அணு ஆயுத திறனையும் மேலும் நவீனமாக்கும் திட்டத்தில் பாகிஸ்தான் உள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: வடகொரியாவில் அதிகரிக்கும் கொரோனா... ஆச்சரியமும், அச்சத்தையும் ஏற்படுத்தும் பராம்பரிய சிகிச்சை முறைகள்

இந்தியாவும் ரஷ்யாவிடம் வாங்கிய S- 400 ரக ஏவுகணைகளை தனது ராணுவத்தில் சேர்க்கத் தொடங்கியுள்ளது. சீனா மற்றும் பாகிஸ்தானின் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள இந்த ஏவுகணைகளை முக்கியத்துவம் வாய்ந்த ஆயுதமாக இந்தியா கருதுவதாக ஸ்காட் பேரியர் கூறியுள்ளார்.

First published:

Tags: Indian army, Intelligence report, Nuclear, Pakistan Army