இந்தியாவுக்கான ரயில் சேவைகளை நிறுத்தியது பாகிஸ்தான்... இந்தியத் திரைப்படங்களுக்கும் தடை!

பாகிஸ்தான் தன் முடிவுகளை ஏன் மறுசீராய்வு செய்யக்கூடாது என்று இந்திய அரசு பாகிஸ்தானிடம் கோரியுள்ளது.

இந்தியாவுக்கான ரயில் சேவைகளை நிறுத்தியது பாகிஸ்தான்... இந்தியத் திரைப்படங்களுக்கும் தடை!
சமஜ்வுதா எக்ஸ்பிரஸ் (மாதிரிப்படம்)
  • News18
  • Last Updated: August 8, 2019, 4:54 PM IST
  • Share this:
இந்தியா - பாகிஸ்தான் இடையேயான சமஜ்வுதா எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை நிறுத்துவதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது.

சட்டப்பிரிவு 370-ஐ குடியரசுத் தலைவரின் ஒப்புதலுடன் இந்திய அரசு நீக்கியுள்ளது. ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து இதன் மூலமாக நீக்கப்பட்டுள்ளது. இந்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு பாகிஸ்தான் கடுமையான கண்டனங்களைத் தெரிவித்து வருகிறது.

இதன் விளைவாக பாகிஸ்தான் அரசு இந்தியக் குடியரசு தினத்தை கறுப்பு தினமாக அறிவித்தது. மேலும், இன்று முதல் பாகிஸ்தானுக்கு இந்தியாவிலிருந்து செல்லும் சமஜ்வுதா எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை நிறுத்துவதாகவும் இனிமேல் இந்தியத் திரைப்படங்கள் பாகிஸ்தானில் வெளியாகாது என்றும் பாகிஸ்தான் அறிவித்துள்ளது.


பாகிஸ்தான் தன் முடிவுகளை ஏன் மறுசீராய்வு செய்யக்கூடாது என்று இந்திய அரசு பாகிஸ்தானிடம் கோரியுள்ளது. ஆனால், காஷ்மீர் விவகாரத்தை ஐநா கொண்டு சென்று சர்வதேச சமூகம் முன்னிலையில் இவ்விவகாரத்தை எடுத்துச் செல்லும் உறுதியில் பாகிஸ்தான் உள்ளது.

மேலும் பார்க்க: பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் இன்று இரவு 8 மணிக்கு உரையாற்றுகிறார்!
First published: August 8, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading