Home /News /international /

லேப்டாப் இல்லாததால் பாகிஸ்தான் பிரதமர் செய்தியை கவர் செய்யாத டிவி சேனல் - 17 அலுவலர்கள் சஸ்பென்ட்

லேப்டாப் இல்லாததால் பாகிஸ்தான் பிரதமர் செய்தியை கவர் செய்யாத டிவி சேனல் - 17 அலுவலர்கள் சஸ்பென்ட்

உரிய லேப்டாப் வசதி இல்லாததால் பாகிஸ்தான் பிரதமரின் செய்தியை கவர் செய்யாத அரசு டிவி சேனல் அலுவலர்கள் 17 பேர் சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளனர்.

உரிய லேப்டாப் வசதி இல்லாததால் பாகிஸ்தான் பிரதமரின் செய்தியை கவர் செய்யாத அரசு டிவி சேனல் அலுவலர்கள் 17 பேர் சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளனர்.

உரிய லேப்டாப் வசதி இல்லாததால் பாகிஸ்தான் பிரதமரின் செய்தியை கவர் செய்யாத அரசு டிவி சேனல் அலுவலர்கள் 17 பேர் சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளனர்.

    பாகிஸ்தானின் புதிய பிரதமராக ஷெபாஸ் ஷெரிப் கடந்த மாதம் தேர்வு செய்யப்பட்டார். இவர் கடந்த வாரம் அந்நாட்டின் லாகூர் மாகாணத்திற்கு பயணம் மேற்கொண்டார். அங்குள்ள கோட் லக்பாத் சிறை, ரம்ஜான் பஜார் ஆகிய பகுதிகளை பிரதமர் பார்வையிட்டார். இந்நிலையில், பாகிஸ்தான் நாட்டின் அரசு டிவி சேனலான பாகிஸ்தான் டிவி (PTV) இந்த பயணத்தை கவர் செய்யாதது சர்ச்சையை கிளப்பியுள்ளது. பிரதமர் பார்வையிட்டதை நிரூபர்கள் வீடியோ பதிவு செய்து அனுப்பிய நிலையில், அதை அப்லோட் செய்து FTP தொழில்நுட்பம் மூலம் அனுப்ப முறையான லேப்டாப் இல்லாததால் இந்த செய்தி கவர் செய்யப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

    பொதுவாக பிரதமரின் அனைத்து நிகழ்வுகளையும் கவர் செய்ய நிரூபர்கள் மற்றும் செய்தி தயாரிப்பாளர்களின் விவிஐபி குழு எப்போதும் தயார் நிலையில் இருக்கும். இவர்களிடம் லேட்டஸ்ட் தொழில்நுட்பத்துடன் கூடிய லேப்டாப் உள்ளிட்ட சாதனங்கள் எப்போதும் இருக்க வேண்டும். இந்நிலையில், லாகூரில் உள்ள டிவி ஊழியர்கள் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள மைய குழுவிடம் பிரதமரின் பயணத்தை கவர் செய்ய மேம்பட்ட தொழில்நுட்பத்தைக் கொண்ட லேப்டாப் வேண்டும் என கேட்டுள்ளது. ஆனால், இஸ்லாமாபாத் தலைமையிடத்தில் இருந்து எந்த பதிலும் வரவில்லை.

    இதையடுத்து லாகூர் மையம் தனிப்பட்ட முறையில், லேப்டாப் தயார் செய்து வீடியோவை அனுப்ப முயன்றுள்ளது. ஆனால், லேப்டாப் ஒழுங்காக செயல்படாமல் பேட்டரி காலியானதால், பிரதமரின் பயணத்தை டிவியால் கவர் செய்ய முடியாமல் போனது. இந்த சம்பவத்தை தொடர்ந்து பிடிவி நிர்வாகம் அதன் 17 அலுவலர்களை சஸ்பென்ட் செய்துள்ளது. விவிஐபி டெப்டி கன்ட்ரோலர் இம்ரான் பஷிர் கான், பொறியாளர்கள், கேமரா மேன் ஆகியோர் இதில் அடக்கம்.

    இதையும் படிங்க: உக்ரைன் நாட்டில் நடிகை ஏஞ்சலினா ஜோலி... போரில் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்தார்

    பாகிஸ்தானில் புதிய ஆட்சி மாற்றம் நடைபெற்ற நிலையில், பழைய ஆட்சி காலத்தில் நியமிக்கப்பட்ட அலுவலர்களை குறிவைத்து இந்த சம்பவத்தில் பலிகடாவாக்கியுள்ளதாக சஸ்பென்ட் செய்யப்பட்டவர்கள் தரப்பு கூறியுள்ளது.
    Published by:Kannan V
    First published:

    Tags: Prime minister

    அடுத்த செய்தி