Home /News /international /

இந்தியாவுடன் நிரந்தர அமைதியை நாட விரும்புகிறோம் - பாகிஸ்தான் பிரதமர் செபாஸ் ஷெரிப் கருத்து

இந்தியாவுடன் நிரந்தர அமைதியை நாட விரும்புகிறோம் - பாகிஸ்தான் பிரதமர் செபாஸ் ஷெரிப் கருத்து

பாகிஸ்தான் பிரதமர் செபாஸ் ஷெரிப்

பாகிஸ்தான் பிரதமர் செபாஸ் ஷெரிப்

Pakistan PM on India : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கு வணிகம், பொருளாதாரம், மக்கள் முன்னேற்றம் ஆகியவற்றில் போட்டி உள்ளது. பாகிஸ்தான் என்றும் ஆக்கிரமிப்பாளராக இருந்தது இல்லை - பிரதமர் செபாஸ் ஷெரிப்

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    இந்தியாவுடன் நிரந்தர அமைதியை நாட விரும்புவதாகவும், காஷ்மீர் பிரச்னைக்கு தீர்வு காண போரை விரும்பவில்லை எனவும் பாகிஸ்தான் பிரதமர் செபாஸ் ஷெரிப் தெரிவித்துள்ளார்

    அமெரிக்காவின் ஹார்வட் பல்கலைக்கழக தூதுக்குழு மாணவர்களிடம் கலந்துரையாடிய செபாஸ் ஷெரிப், இந்தியா பாகிஸ்தான் உறவு, பாகிஸ்தானின் பொருளாதாரம் உள்ளிட்டவை குறித்து கலந்துரையாடினார். 

    அப்போது பேசிய அவர், பாகிஸ்தான் இந்தியாவுடன் நிரந்தர அமைதியை பேச்சுவார்த்தை மூலம் நாடுவதாகவும், இரு நாடுகளும் போர் செய்வதில் விருப்பம் இல்லை எனவும் தெரிவித்தார். மேலும் காஷ்மீர் பிரச்னையை ஐக்கிய நாடுகள் அவையில் தீர்வு காண முற்படுவதாக தெரிவித்தார். 

    5 ஆகஸ்ட் 2019 அன்று, காஷ்மீருக்கு சிறப்பு அதிகாரம் வழங்கும் சட்டப்பிரிவு 370-ஐ ரத்து செய்தபோது, இந்தியா பாகிஸ்தான்  நாடுகளுக்கு இடையேயான சிக்கல் மேலும் அதிகரித்தது. அப்போது பாகிஸ்தான் தனது நாட்டில் இருந்து இந்திய தூதுவரை வெளியேற்றி தனது எதிர்ப்பினை வெளிப்படுத்தியது. இரு நாடுகளுக்கு இடையேயான உறவு மேலும் வலுவிழந்தது.

    இருப்பினும் ஜம்மு காஷ்மீர் பகுதி இந்த நாட்டின் ஒருங்கிணைந்த பகுதியாக, எப்போதும் இருக்கும் என இந்தியா உறுதிபட தெரிவித்தது. மேலும் பாகிஸ்தானுடம் வன்முறை மற்றும் தீவிரவாதமற்ற உறவை பேணுவதாகவும் தெரிவித்தது.

    காஷ்மீர் விவகாரம்:

    இது குறித்து செபாஸ் ஷெரிப் கூறுகையில், இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கு வணிகம், பொருளாதாரம், மக்கள் முன்னேற்றம் ஆகியவற்றில் போட்டி உள்ளது. பாகிஸ்தான் என்றும் ஆக்கிரமிப்பாளராக இருந்தது இல்லை. பாகிஸ்தானிடம் இருக்கும் அணு ஆயுதங்கள் கூட நாட்டை தற்காத்து கொள்ள மட்டும் தானே ஒழிய, யாரையும் ஒடுக்குவதற்கு இல்லை என விளக்கம் அளித்தார். 

    பாகிஸ்தானின் பொருளாதரம் பற்றி எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், ஆரம்ப காலங்களில் பாகிஸ்தான் பிரம்மிக்கத்தக்க வளர்ச்சியை நோக்கி சென்று கொண்டிருந்தது எனவும் இடைப்பட்ட காலங்களில் இருந்த அசாதாரண அரசியல் சூழல் காரணமாக சற்று தொய்வு ஏற்பட்டதாகவும் கூறினார்.
    Published by:Siddharthan Ashokan
    First published:

    அடுத்த செய்தி