பாகிஸ்தான் ராணுவ தளபதி பதவி நீட்டிப்பு அரசாணை ரத்து - உச்சநீதிமன்றம்

பாகிஸ்தான் ராணுவ தளபதி பதவி நீட்டிப்பு அரசாணை ரத்து - உச்சநீதிமன்றம்
பாகிஸ்தான் ராணுவ தலைமை தளபதி பாஜ்வா
  • News18
  • Last Updated: November 27, 2019, 1:06 PM IST
  • Share this:
பாகிஸ்தான் ராணுவ தலைமை தளபதியின் பதவிக் காலத்தை மேலும் 3 ஆண்டுகள் நீட்டித்து வெளியிட்ட அரசாணையை அந்நாட்டு உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

பாகிஸ்தான் ராணுவ தலைமை தளபதி பாஜ்வாவின் பதவிக்காலம் நாளை மறுதினத்துடன் முடிவடைகிறது. இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் ராணுவ தலைமை தளபதி ஜெனரல் குவாமர் ஜாவத் பாஜ்வாவின் பதவிக்காலத்தை மேலும் 3 ஆண்டுகள் நீட்டிக்க பிரதமர் இம்ரான் கான் ஒப்புதல் அளித்தார்.

இதை எதிர்த்து ராய்ஸ் ராஹி என்பவர் பாகிஸ்தான் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து பின்னர் தன் மனுவை திரும்ப பெறுவதாக அறிவித்தார்.


இருப்பனும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஆசிஃப் சயீத் கோசா மனுவை திரும்ப பெற அனுமதிக்கவில்லை. அந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதி், ராணுவத் தலைமை தளபதியின் பதவியை நீட்டிக்கும் அதிகாரம் அதிபருக்கு மட்டுமே இருப்பதாக கூறி பதவி நீட்டிப்பு அரசாணையை ரத்து செய்து செய்து உத்தரவிட்டார்.

Also see...
First published: November 27, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்