இந்தியா குறிப்பிட்ட இடங்களில் தீவிரவாத முகாம்கள் இல்லை! பாகிஸ்தான் பதில்

இதற்கிடையில், பாகிஸ்தானில் தீவிரவாத முகாம்கள் செயல்படுவதாக 22 இடங்களைக் குறிப்பிட்டு கடந்த பிப்ரவரி 27-ம் தேதி பாகிஸ்தான் உயரதிகாரியிடம் இந்தியா அளித்தது.

இந்தியா குறிப்பிட்ட இடங்களில் தீவிரவாத முகாம்கள் இல்லை! பாகிஸ்தான் பதில்
புல்வாமாவில் தற்கொலைப் படை தாக்குதல் நடத்தி ராணுவ வீரர்களின் உயிரைக் குடித்த வாகனத்தின் அடையாளத்தை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். தலைமறைவாகியுள்ள அந்த வாகனத்தின் உரிமையாளரையும் அதிகாரிகள் தேடி வருகின்றனர்.
  • News18
  • Last Updated: March 28, 2019, 4:59 PM IST
  • Share this:
பாகிஸ்தானில் தீவிரவாத முகாம்கள் செயல்படுவதாக இந்தியா குறிப்பிட்டிருந்த 22 பகுதிகளில் எந்த தீவிரவாத முகாம்களும் செயல்படவில்லை என்று பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது.

காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் பாதுகாப்பு படை வீரர்கள் மீது நடைபெற்றத் தீவிரவாதத் தாக்குதலில் 40 பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவத்துக்கு பாகிஸ்தானிலிருந்து செயல்படும் தீவிரவாத அமைப்புகள்தான் காரணம் என்று குற்றம்சாட்டிவருகிறது.

மேலும், பாகிஸ்தானில் செயல்படும் தீவிரவாத அமைப்புகள்தான் இந்தியாவில் தீவிரவாதச் செயல்களில் ஈடுபடுகின்றன என்று இந்தியா தொடர்ச்சியாக குற்றம்சாட்டிவருகின்றன. இதற்கிடையில், பாகிஸ்தானில் தீவிரவாத முகாம்கள் செயல்படுவதாக 22 இடங்களைக் குறிப்பிட்டு கடந்த பிப்ரவரி 27-ம் தேதி பாகிஸ்தான் உயரதிகாரியிடம் இந்தியா அளித்தது.


இந்தியா அளித்த அறிக்கையின் அடிப்படையில் பாகிஸ்தான் சோதனை நடத்தியது தொடர்பான முதல்கட்ட அறிக்கையை இந்தியாவிடம் பாகிஸ்தான் அளித்துள்ளது. அந்த அறிக்கையில், ‘இந்தியா குறிப்பிட்ட 22 இடங்களிலும் சோதனை நடத்திவிட்டோம்.

எந்த இடத்திலும் தீவிரவாத முகாம்கள் இல்லை. புல்வாமா தாக்குதல் தொடர்பாக கைது செய்யப்பட்ட 54 பேரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர்களுக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்று தெரியவந்துள்ளது. அந்தப் பகுதிகளில் சோதனை நடத்துவதற்கு அனுமதி அளிக்கத் தயாராக உள்ளோம்.

Also see:
First published: March 28, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading