பாகிஸ்தான் மீது இந்தியா மீண்டும் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளது என்று பாகிஸ்தான் அமைச்சர் ஷா மஹமூத் குரேஷி தெரிவித்துள்ளார்.
காஷ்மீர் மாநிலம் புல்வாமா பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பாதுகாப்பு படை வீரர்கள் 40-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
இந்தச் சம்பவம் நாடு முழுவதும் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. தீவிரவாதிகள் தாக்குதலுக்கு பதில் தாக்குதல் நடத்தும் விதமாக, பாகிஸ்தானின் பாலகோட் பகுதியில் வான்வழியாக சென்று இந்திய வீரர்கள் தாக்குதல் நடத்தினர்.
இந்த விவகாரம், இரு நாடுகளுக்கிடையே பதற்றத்தை ஏற்படுத்தியது. உலக நாடுகளும் அமைதி காக்க வேண்டும் என்று உலக நாடுகள் வலியுறுத்தின.
இந்தநிலையில், பாகிஸ்தான் மீது இந்தியா மீண்டும் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளது என்று அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா மஹமூத் குரேஷி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளது என்று எங்களுக்கு நம்பத் தகுந்த வட்டாரத்தில் இருந்து தகவல்கள் வந்துள்ளன. எங்களுக்கு கிடைத்த தகவலின்படி, ஏப்ரல் 16-ம் தேதியிலிருந்து 20-ம் தேதிக்குள் தாக்குதல் நடைபெறலாம்.
ஆளும் பா.ஜ.க அரசு போர் வெறி பிடித்து அலைகிறது. இதுகுறித்து ஊடகங்களில் பேசுவதற்கு பிரதமர் இம்ரான் கான் அனுமதி அளித்துள்ளார்’ என்று தெரிவித்தார். இதுதொடர்பாக, ஐ.நாவின் பாதுகாப்பு கவுன்சிலும் பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
Also see:
Published by:Karthick S
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.