இந்தியாவுக்கு முழுமையான பதிலடி கொடுக்கப்படும் - பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்

காஷ்மீருக்காக எந்த எல்லைக்கும் செல்லத் தயார் என்று பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஜாவேத் பஜ்வா குறிப்பிட்டுள்ளார்

news18
Updated: September 7, 2019, 7:20 AM IST
இந்தியாவுக்கு முழுமையான பதிலடி கொடுக்கப்படும் - பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்
இம்ரான் கான்
news18
Updated: September 7, 2019, 7:20 AM IST
காஷ்மீர் பிரச்னையில் இந்தியாவுக்கு முழுமையான பதிலடி கொடுக்கப்படும் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு அந்த மாநிலம் இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டதற்கு, பாகிஸ்தான் ஆரம்பம் முதலே கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இரு நாட்டிற்கு இடையே போர் மூளும் சூழல் உள்ளதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கூறிவருகிறார். இந்நிலையில் இருநாட்டு எல்லைக்கட்டுப்பாட்டு அருகே பாக், கோட்லி பகுதியில் சுமார் 2,000 வீரர்களை பாகிஸ்தான் ராணுவம் குவித்துள்ளது. இந்திய எல்லையில் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் 2,000 பேரும் நிறுத்தப்பட்டுள்ளனர்.

இதுமட்டுமின்றி கைபர் பக்துங்க்வா மாகாணம் வழியாக இந்தியாவுக்குள் பயங்கரவாதிகளை அனுப்புவதற்கு பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் வழிபாட்டுத் தலங்களுக்கு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஜம்மு-காஷ்மீரில் உள்ள ஆலயங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.


இதனிடையே ரேடியோ பாகிஸ்தான் வானொலியில் பேசிய அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான், காஷ்மீர் பிரச்னையில் இந்தியாவுக்கு முழுமையான பதிலடி கொடுக்கப்படும் என்றும் இந்தியா- பாகிஸ்தான் இடையே அசம்பாவிதம் ஏதும் நிகழ்ந்தால் அதற்கு உலக நாடுகளே பொறுப்பு எனவும் கூறியுள்ளார். இதேபோல் பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஜாவேத் பஜ்வா, காஷ்மீருக்காக எந்த எல்லைக்கும் செல்லத் தயார் என்று குறிப்பிட்டுள்ளார். இதனால் காஷ்மீர் எல்லையில் தொடர்ந்து பதற்றம் நீடித்து வருகிறது

Also watch

First published: September 7, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...