பயங்கரவாதி ஹபீஸ் சயீத்தின் வங்கிக் கணக்கில் இருந்து பணத்தை விடுவிக்க பாகிஸ்தான் கோரிக்கை

பயங்கரவாதி ஹபீஸ் சயீத்தின் வங்கிக் கணக்கில் இருந்து பணத்தை விடுவிக்க பாகிஸ்தான் கோரிக்கை
பயங்கரவாதி ஹபீஸ் சயீத்
  • News18 Tamil
  • Last Updated: September 26, 2019, 10:55 PM IST
  • Share this:
அடிப்படைத் தேவைகளுக்காக பயங்கரவாதி ஹபீஸ் சயீத்தின் வங்கிக் கணக்கில் இருந்து பணத்தை விடுவிக்க வேண்டுமென ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலில் பாகிஸ்தான் கோரிக்கை வைத்தது.

மும்பைத் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர் பாகிஸ்தானின் ஜமாத் உத் தவா அமைப்பின் தலைவர் ஹஃபீஸ் சயீத். ஜுலை 17-ம் தேதி கைது செய்யப்பட்டார். அவரது வங்கிக் கணக்குகளும் முடக்கப்பட்டன.

பின்னர் அவர் விடுதலை செய்யப்பட்டாலும், அவரது வங்கிக் கணக்குகள் தொடர்ந்து முடங்கியே உள்ளன. இந்நிலையில் குடும்பத் தேவைகளுக்கு கூட பணமில்லாமல் ஹஃபீஸ் சயீத் தவிப்பதாகவும், அதனால் பாகிஸ்தான் மதிப்பில் 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை வங்கிக் கணக்கில் இருந்து விடுவிக்க வேண்டும் எனவும் ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலில் பாகிஸ்தான் கோரிக்கை வைத்தது.


இதற்கு எந்தநாடும் ஆட்சேபனை தெரிவிக்காததால் அவரது செலவுக்கான பணத்தை விடுவிக்க ஐ.நா. ஒப்புதல் அளித்துள்ளது.
First published: September 26, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்