காஷ்மீர் இந்தியாவின் பகுதி என்று செய்தி - பாகிஸ்தான் டிவி பத்திரிகையாளர்கள் 2 பேர் நீக்கம்

பாகிஸ்தானில் காஷ்மீரை இந்தியாவின் ஒரு பகுதியாக காட்டும் வரைபடத்தை செய்தியில் ஒளிபரப்பியதால் இரு பத்திரிகையாளர்கள் பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

காஷ்மீர் இந்தியாவின் பகுதி என்று செய்தி - பாகிஸ்தான் டிவி பத்திரிகையாளர்கள் 2 பேர் நீக்கம்
மாதிரி படம் (Photo; Reuters)
  • Share this:
பிடிவி எனப்படும் பாகிஸ்தான் டிவியில் கடந்த 6ம் தேதி அந்த வரைபடத்துடன் செய்தி ஒளிபரப்பானது. அதனைக் கண்டித்து நாடாளுமன்றத்தில் பிரச்னை எழுப்பப்பட்ட நிலையில் இந்த விவகாரம் அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பதற்காக தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சகத்திற்கு அனுப்பப்பட்டது.

இந்நிலையில் செய்தி ஒளிபரப்பக் காரணமான இருவரை பணி நீக்கம் செய்துள்ளதாக பிடிவி தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் வசம் உள்ள காஷ்மீரின் ஒரு பகுதியை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் என இந்தியா தனது வரைபடத்தில் குறிப்பிடும் நிலையில், காஷ்மீரை தங்களது நாட்டின் ஒரு அங்கமாக பாகிஸ்தான் வரைபடத்தில் காட்டப்படுகிறது.


Also read... ஆன்லைனில் மது விற்பனை - தமிழக அரசிற்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல்

First published: June 12, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading