முகப்பு /செய்தி /உலகம் / EXCLUSIVE | பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இன்று ராஜினாமா செய்கிறார்?

EXCLUSIVE | பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இன்று ராஜினாமா செய்கிறார்?

இம்ரான் கான்

இம்ரான் கான்

EXCLUSIVE | நம்பிக்கை வாக்கெடுப்பு குறித்து கருத்து தெரிவித்திருந்த இம்ரான் கான், கடைசி பந்து வரை விளையாடுவேன் என கூறியிருந்தார்.

  • Last Updated :

பாகிஸ்தானில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுவதற்கு முன்பே, இம்ரான் கான் பிரதமர் பதவியிலிருந்து ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கினறன.

பாகிஸ்தானில் கடந்த சில ஆண்டுகளாகவே பொருளாதாரம் கடும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளது. கடுமையான கடன் சுமையால் சிக்கல் ஒருபுறம், பொருளாதார வீழ்ச்சி மறுபுறம் என இரட்டை சிக்கலை சந்தித்து வருகிறது.

பொருளாதார சுணக்கத்திற்கு இம்ரான் கானின் தவறான கொள்கைகளே காரணம் என குற்றம் சாட்டி வரும் எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் நம்பிக்கை இல்லா தீர்மானத்தை தாக்கல் செய்துள்ளன. இந்த தீர்மானத்தின் மீது வரும், 28-ம் தேதி வாக்கெடுப்பு நடக்கிறது.

மொத்தமுள்ள 342 எம்.பி.க்களில், 172 பேரின் ஆதரவு தேவை. இம்ரான் கானின் ஆளும் தெஹ்ரிக் கட்சிக்கு 155 எம்.பி.க்கள் உள்ளனர். ஆளும் கூட்டணிக்கு பிற கட்சிகளைச் சேர்ந்த 23 எம்.பி.க்களின் ஆதரவு உள்ளது. இவர்கள் தற்போது அரசுக்கு அளித்து வந்த ஆதரவை திரும்ப பெற திட்டமிட்டுள்ளனர்.

ஏப்.1ம் தேதி முதல் துபாயில் இருந்து இந்தியாவுக்கு விமான சேவை அதிகரிப்பு!

மேலும் இம்ரான் கான் கட்சியை சேர்ந்து 24 எம்பிக்களும் அரசின் மீது அதிருப்தி தெரிவித்து வருகின்றனர்.  இவர்கள் அரசுக்கு எதிராக வாக்களிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்னரே இம்ரான் கான் பிரதமர் பதவியிலிருந்து ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இஸ்லாமாபாத்தில் தெஹ்ரிக் கட்சியின் சார்பில் இன்று நடைபெற உள்ள "நீதியுடன் நிற்பது" என்ற பேரணியில், தனது ராஜினாமா குறித்த தகவலை அறிவிப்பார் என செய்திகள் வெளியாகி உள்ளன.

முன்னதாக, நம்பிக்கை வாக்கெடுப்பு குறித்து கருத்து தெரிவித்திருந்த இம்ரான் கான், கடைசி பந்து வரை விளையாடுவேன் என கூறியிருந்தார்.

69 வயதான, முன்னாள் கிரிக்கெட் வீரரான இம்ரான் கான் பாகிஸ்தான் தெஹ்ரிக் கட்சியின் தலைவராவார். 2018- ஆம் ஆண்டு முதல் பாகிஸ்தானின் பிரதமராக பதவி வகித்து வருகிறார்.

First published:

Tags: Pakistan Army, PM Imran Khan