• HOME
  • »
  • NEWS
  • »
  • international
  • »
  • பயங்கரமான மாஸ்க் அணிந்து மக்களை பீதியில் ஓடச்செய்யும் நபர்கள்: பாகிஸ்தானில் ஃபேஷன் ஆகும் வக்கிர மனநிலை

பயங்கரமான மாஸ்க் அணிந்து மக்களை பீதியில் ஓடச்செய்யும் நபர்கள்: பாகிஸ்தானில் ஃபேஷன் ஆகும் வக்கிர மனநிலை

கைது செய்யப்பட்ட பாகிஸ்தான் நபர்.

கைது செய்யப்பட்ட பாகிஸ்தான் நபர்.

அச்சமூட்டக்கூடிய பயங்கரமான முகக் கவசம் அணிந்து கொண்டு மக்களை அச்சுறுத்திய நபர் ஒருவர் பாகிஸ்தானில் கைது செய்யப்பட்டார்.

  • Share this:
    அச்சமூட்டக்கூடிய பயங்கரமான முகக் கவசம் அணிந்து கொண்டு மக்களை அச்சுறுத்திய நபர் ஒருவர் பாகிஸ்தானில் கைது செய்யப்பட்டார்.

    இது தொடர்பாக பாகிஸ்தான் பத்திரிகையாளர் நைலா இனாயத் தனது டிவிட்டரில் வீடியோ வெளியிட்டார், அதில் ஒரு நபர் அச்சமூட்டக்கூடிய மாஸ்க்கை அணிந்து மக்களை அச்சுறுத்தினார்.

    இவர் இப்போது மட்டுமல்ல பாகிஸ்தான் சுதந்திர தினத்தன்று இப்படிப்பட்ட மாஸ்க்கை அணிந்து கொண்டு மக்களை பீதியடையச் செய்ய இருந்தாராம். பாகிஸ்தான் சுதந்திர தினம் ஆகஸ்ட் 14ம் தேதி கொண்டாடப்படுகிறது.

    அதற்கு ஒத்திகை பார்த்தாராம் இப்போது, ஆனால் போலீசிடம் வசமாகச் சிக்கினார்.



    இந்த ஆண்டு ஜனவரி 1, 2021-ல் பெஷாவரில் இப்படி பயங்கரமான மாஸ்க்கை அணிந்து மக்களை பீதியில் ஓடச்செய்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டதும் நினைவுகூரத்தக்கது.

    சிலருக்கு இது பொழுதுபோக்கு என்றாலும் இதன் பின்னணியில் பிறழ்ந்த மனநிலை இருப்பதாகவே உளவியல் நிபுணர்கள் கருதுகின்றனர்.

    இந்தியாவில் கூட வீடுகளில் ஒருவரையொருவர் இப்படி பயமுறுத்துவது நடப்பது குடும்ப வேடிக்கைகளில் ஒன்று என்றாலும் விளையாட்டு சில வேளைகளில் விபரீதமடைந்த சம்பவங்களும் உண்டு.



    அதாவது மனத்தளவில் பலவீனமாக இருப்பவர்கள் தங்களைக் கண்டு மக்கள் பயப்படுவதைப் பார்த்து உள்ளுக்குள் ஒரு சாடிஸ்ட் இன்பமடைகின்றனர். அல்லது பொதுவாகவே ஒரு சிலருக்கு அடுத்தவர் துன்பப் படும்போதோ, பயப்படும்போதோ அதை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் குணாம்சம் இருக்கும், எதுவாக இருந்தாலும் இது ஒரு உளவியல் சிக்கல் என்றே உளவியல் சாஸ்திரங்கள் கூறுகின்றன.

    பாகிஸ்தானில் பொதுவாக பண்டிகை தினம், விழாக்காலங்கள், பொது நிகழ்ச்சிகளில் இப்படி பயங்கர மாஸ்க்கைப் போட்டுக்கொண்டு அச்சமூட்டும் நபர்களின் எண்ணிக்கையும் சம்பவங்களும் அதிகமாகவே ஆகியுள்ளன என்கின்றனர் அந்நாட்டு சமூக ஆர்வலர்கள்.

    ஏற்கெனவே பயங்கரவாதத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் இத்தகைய வக்கிர நபர்களால் மேலும் மன உளைச்சளுக்கு ஆளாகி வருகின்றனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: