Home /News /international /

மைக் அணிய படாதபாடு பட்ட பாகிஸ்தான் பிரதமர்..வாய் விட்டு சிரித்த புதின்..வைரலாகும் வீடியோ

மைக் அணிய படாதபாடு பட்ட பாகிஸ்தான் பிரதமர்..வாய் விட்டு சிரித்த புதின்..வைரலாகும் வீடியோ

பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஷ் ஷெரிப் ரஷ்ய அதிபர் புதினுடன் சந்திப்பு

பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஷ் ஷெரிப் ரஷ்ய அதிபர் புதினுடன் சந்திப்பு

ரஷ்ய அதிபர் புதின் உடனான சந்திப்பின் போது பாகிஸ்தான் பிரதமர் மைக்கை முறையாக அணிய முடியமால் தவித்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • inter, Indiasamarkandsamarkand
    ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (SCO) நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் உச்சிமாநாடு உஸ்பெகிஸ்தான் நாட்டின் தலைநகர் சமர்கண்ட்டில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஜி ஜிங்பிங், ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் உள்ளிட்டோர் உஸ்பெகிஸ்தான் சென்றுள்ளனர்.

    இந்த உச்சிமாநாட்டில், பிராந்திய மற்றும் சர்வதேச பிரச்சினைகள், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் விரிவாக்கம், வர்த்தகம், பொருளாதாரம், கலாச்சாரம் மற்றும் சுற்றுலா ஆகிய அம்சங்களை தலைவர்கள் விவாதிக்கவுள்ளனர்.இந்த உச்சி மாநாட்டில் பங்கேற்க வந்துள்ள ரஷ்ய அதிபர் புதினுடன் பாகிஸ்தானின் புதிய பிரதமர் ஷெபாஸ் ஷெரிப் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த சந்திப்பில் மைக்கை சரியாக அணிய முடியாமல் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரிப் தவித்த சம்பவம் அவருக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியது. இதை அருகே அமர்ந்து பார்த்துக்கொண்டிருந்த ரஷ்ய அதிபர் புதின் சிரிக்கவே இந்த காணொலி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

    இரு நாட்டு தலைவர்களும் மேடையில் அமர்ந்த நிலையில், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஷ் ஷெரிப்புக்கு மைக் தரப்பட்டது. பொதுவாக உலக தலைவர்கள் தங்களின் தாய் மொழியில் உரையாடுவதை வசதியாகவும் வழக்கமாகவும் வைத்திருப்பார்கள். இந்த மைக்கானது அதை மொழிபெயர்த்து எதிர்தரப்புக்கு புரியும் மொழியில் மாற்றித் தரும். இந்த மைக்கை காதுக்குள் முறையாக எப்படி அணிவது என்று தெரியாமல் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஷ் ஷெரிப் சங்கடப்பட்டார். இதை எதிரில் இருந்த ரஷ்ய அதிபர் புதின் சிரித்துக்கொண்டே கவனித்துவந்தார்.

    இதையும் படிங்க: வளர்த்தவரை அடித்துக் கொன்ற கங்காரூ..ஆஸ்திரேலியாவில் அதிர்ச்சி சம்பவம்

    யாராவது வந்து எனக்கு உதவுங்கள் என பாகிஸ்தான் பிரதமர் வாய்விட்டு கேட்டார். உடனடியாக அங்கிருந்த உதவியாளர் மைக்கை செட் செய்து கொடுத்தார். அப்போது அது பாகிஸ்தான் பிரதமருக்கு வேலை செய்யவில்லை, இதைப் பார்த்ததும் ரஷ்ய அதிபர் புதின் மீண்டும் வாய்விட்டு சிரித்துள்ளார்.


    பாகிஸ்தான் அதிபர் தர்ம சங்கடத்திற்கு ஆளானது அதை பார்த்து ரஷ்ய அதிபர் புதின் சிரிப்பதுமான இந்த காணொலி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக பாகிஸ்தான் பிரதமரின் உடல்மொழியை விமர்சித்து அந்நாட்டு எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றன.
    Published by:Kannan V
    First published:

    Tags: Russia, Viral Video, Vladimir Putin

    அடுத்த செய்தி