Home /News /international /

மதுபானம் வைத்திருந்ததாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் மகன் கைது...

மதுபானம் வைத்திருந்ததாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் மகன் கைது...

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்

Pakistan PM Imran Khan: இஸ்லாமிய நாடான பாகிஸ்தானில் மதுபானம் விற்பதும் அருந்துவதும் சட்டவிரோதம் ஆகும்.

    காரில் மதுபானம் வைத்திருந்ததாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் மனைவியின் மகன் உட்பட மூன்று பேரை  போலீசார் கைது செய்தனர். பின்னர், உயர் அதிகாரிகள் உத்தரவையடுத்து  அவர்கள் உடனடியாக விடுவிக்கப்பட்டார்.

    பாகிஸ்தான் பிரதமராக உள்ள இம்ரான் கான் கடந்த  1995ம் ஆண்டு பிரிட்டனை சேர்ந்த ஜெமீமா கோல்டுஸ்மித் என்பவரை திருமணம் செய்துகொண்டார் 9 ஆண்டு மண வாழ்க்கைக்கு பின்னர் 2004ஆம் ஆண்டு இவர்கள் விவாகரத்து பெற்றனர். அதனை தொடர்ந்து  பிரிட்டன் - பாகிஸ்தான் செய்தியாளரான ரேஹம் கானை திருமணம் செய்து ஒரே ஆண்டில் விவகாரத்து செய்தார்.  2018ல் புஷ்ரா பீவி கான் என்பவரை 3வதாக திருமணம் செய்து அவருடன் தற்போது வாழ்ந்து வருகிறார் இம்ரான் கான்.

    இந்நிலையில், புஷ்ரா பீவிக்கு முந்தைய திருமணம் மூலம் பிறந்த மகனான மூசா மனேகா, காரில் மதுபானம் வைத்திருந்ததாக கூறி போலீசார் அவரை கைது செய்தனர்.  கடாஃபி ஸ்டேடியம் அருகே மூசா தனது நண்பர்களுடன் காரில் சென்றுள்ளார். போலீசார் காரை நிறுத்தி சோதனையிட்ட போது மதுபானம் இருந்தது தெரியவந்தது.

    இஸ்லாமிய நாடான பாகிஸ்தானில் மதுபானம் விற்பதும் அருந்துவதும் சட்டவிரோதம் ஆகும். இதையடுத்து, மூசா மனேகா மற்றும் அவரது 2 நண்பர்களை போலீசார் கைது செய்தனர். அப்போது பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் மனைவியின் மகன் தான் என்று கூறி மூசா போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

    இதையும் படிங்க: ரஷ்யா- உக்ரைன் போர் ஏற்பட்டால் இந்தியாவில் எவையெல்லாம் விலை உயரும்?


    இதேபோல், அவர்களை கைது செய்து வழக்கு பதிவு செய்த சில நேரத்திற்கெல்லாம் பஞ்சாப் மாகாண போலீசாருக்கு பலரிடம் இருந்தும் தொலைப்பேசியில் அழைப்பு வந்துள்ளது. பின்னர். உயர்ந்த அதிகார மட்டத்தில் இருந்து வந்த உத்தரவையடுத்து அவர்கள் அன்றே விடுதலை செய்யப்பட்டனர்.
    Published by:Murugesh M
    First published:

    Tags: Pakistan News in Tamil, PM Imran Khan

    அடுத்த செய்தி