பேச்சுவார்த்தையே தீர்வு...! பிரதமர் மோடிக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கடிதம்

காஷ்மீர் பிரச்சினை உள்பட அனைத்து பிரச்சினைகள் குறித்தும் பேசி தீர்வுகாண தயாராக இருப்பதாகவும் அவர் கடிதத்தில் கூறியுள்ளார்.

news18
Updated: June 8, 2019, 9:28 AM IST
பேச்சுவார்த்தையே தீர்வு...! பிரதமர் மோடிக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கடிதம்
இம்ரான் கான்
news18
Updated: June 8, 2019, 9:28 AM IST
இரு நாடுகளுக்கு இடையே உள்ள பிரச்னையை பேச்சுவார்த்தை மூலமே தீர்க்க முடியும் என்று பிரதமர் மோடிக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கடிதம் எழுதியுள்ளார்.

பிரதமர் மோடி இரண்டாவது முறையாக பதவியேற்றதை அடுத்து, பாகிஸ்தான் இம்ரான் கான் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டின்போது பிரதமர் மோடி, இம்ரான்கான் இடையே தனிப்பட்ட சந்திப்பு இல்லை என்று இந்தியா அறிவித்ததைத் தொடர்ந்து இம்ரான்கான், மோடிக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார்.

அதில், 2-வது முறையாக பிரதமர் பொறுப்பேற்றுள்ள பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவிப்பதாகவும், இரு நாடுகளும் பேச்சுவார்த்தை நடத்துவது தான் இரு நாடுகளுக்கும் பலன் அளிக்கும் ஒரே தீர்வு என்றும் கூறியுள்ளார்.

காஷ்மீர் பிரச்சினை உள்பட அனைத்து பிரச்சினைகள் குறித்தும் பேசி தீர்வுகாண தயாராக இருப்பதாகவும் அவர் கடிதத்தில் கூறியுள்ளார்.

First published: June 8, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...