தடுப்பூசி போட்டுக் கொண்ட பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு கொரோனா பாதிப்பு

இம்ரான் கான் -பாகிஸ்தான் பிரதமர்

67 வயதான இம்ரான் கான் சீன தயாரிப்பு கொரோனா ஊசி முதல் டோஸை 2 நாட்டுகளுக்கு முன் போட்டுக் கொண்டார்.

 • Share this:
  பாகிஸ்தான் பிரமர் இம்ரான் கானுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சர் ஃபைசல் சுல்தான் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

  இது தொடர்பாக ஃபைசல் சுல்தான் தனது ட்விட்டர் பக்கத்தில், பிரதமர் இம்ரான் கானுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் வீட்டில் தன்னை தனிமைப்படுத்தி கொண்டுள்ளார்“ என்று பதவிட்டுள்ளார்.  67 வயதான இம்ரான் கான் சீன தயாரிப்பு கொரோனா ஊசி முதல் டோஸை 2 நாட்டுகளுக்கு முன் போட்டுக் கொண்டார். தடுப்பூசி போட்டுக் கொண்ட 2 நாட்களுக்கு பின் அவருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. பாகிஸ்தானில் நாடு முழுவதும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கெரோனா தடுப்பூசி முதல் டோஸ் போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

  பாகிஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் 3876 பேருக்கு கொரோனோ தொற்று பதிவாகி உள்ளது.
  Published by:Vijay R
  First published: