Dilip Kumar | என் தாயின் நினைவாகக் கட்டிய புற்று நோய் மருத்துவமனைக்கு நிதித் திரட்டித் தந்தார் திலீப் குமார்- பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இரங்கல்

இம்ரான் கான்

பாலிவுட்டின் மூத்த நடிகர் திலீப் குமார் மும்பையில் உள்ள இந்துஜா மருத்துவமனையில் காலமானதையடுத்து இவருக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இரங்கல் தெரிவித்துள்ளார்.

  • Share this:
    திலீப் குமாரின் உடல், மும்பை சான்டாகுரூசில் , அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப் பட்டது. இம்ரான் கான் தன் தாயின் நினைவாகக் கட்டிய புற்று நோய் மருத்துவமனைக்கு நிதி திரட்டி தந்தார்.

    பாகிஸ்தானின் பெஷாவரில் உள்ள நடிகர் திலீப் குமாரின் பிறந்த வீட்டை, தேசிய பாரம்பரிய சின்னமாக, அந்நாட்டு அரசு ஏற்கனவே அறிவித்துள்ளது. அந்த வீட்டை, அருங்காட்சியகமாக மாற்றும் பணியும் முடிவடைந்து விட்டது.

    திலீப் குமார் கடந்த சில ஆண்டுகளாக சிறுநீரக நோய் முதல் நிமோனியா வரை பல நோய்களுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். சில ஆண்டுகளுக்கு முன்பு, தனது 94-வது பிறந்தநாளை காய்ச்சல் மற்றும் கால் வீங்கியதால் சிகிச்சை பெற்று வந்த மருத்துவமனையிலேயே கொண்டாடினார். டிசம்பரில் 99-வது பிறந்தநாளை கொண்டாடவிருந்த நிலையில் காலமானார். இவருக்கு பலதரப்புகளிலிருந்தும் இரங்கல்கள், புகழாஞ்சலிகள் குவிந்து வருகின்றன.

    Also Read: Dilip Kumar: திலீப் குமார் - இந்திய சினிமாவின் ட்ராஜடி கிங்!

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இதில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தன் இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:

    புற்று நோயால் இறந்த என் தாயின் நினைவாக, புற்று நோய் மருத்துவமனையை கட்டினேன். அதற்கு நிதி திரட்டுவது ஆரம்பத்தில் மிக கடினமாக இருந்தது. அப்போது, பாகிஸ்தான் மற்றும் லண்டனில் கலை நிகழ்ச்சி நடத்தி, மருத்துவமனைக்கான முதல், 10 சதவீத நிதியை, திலிப் குமார் திரட்டி தந்தார்.

    இதை நான் என்றைக்கும் மறக்க மாட்டேன்.அவரது மறைவு, என்னை கடும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர் மற்றும் ரசிகர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

    என்று தன் இரங்கல் குறிப்பில் தெரிவித்துள்ளார் இம்ரான் கான்.
    Published by:Muthukumar
    First published: