தேர்தல் வெற்றியே குறி, பிராந்தியத்தின் எதிர்காலம் பற்றி கவலையில்லை: துல்லியத் தாக்குதல் குறித்து மோடி மீது இம்ரான் விமர்சனம்

இம்ரான் கான் -பாகிஸ்தான் பிரதமர்

இந்த பிரதேசத்தில் அமைதி குலைவதற்கு காரணமாக இந்தியா உள்ளது. அண்டை நாடுகளுடனான பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதற்கு, இந்தியா தயாராக இல்லை என்று இம்ரான் கான் கடுமையாக விமர்சித்துள்ளார்.

 • Share this:
  பாகிஸ்தானின் பயங்கரவாத முகாம்களை, 2019, பிப்., 26ல், இந்திய ராணுவம், தாக்குதல் நடத்தி அழித்தது, இதற்குத் துல்லியத் தாக்குதல் என்று பெயரிட்டது.

  இந்தத் தாக்குதல் விவகாரம் ஏற்கெனவே பத்திரிகையாளர் அர்னாப் கோஸ்வாமிக்குத் தெரிந்திருந்தது என்பது இப்போது சர்ச்சையான நிலையில், அப்போது தேர்தல் வெற்றியைக் குறியாகக் கொண்டு பிராந்திய அமைதிக்கு இந்திய அரசு குந்தகம் விளைவித்துள்ளது என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் விமர்சித்துள்ளார்.

  ஆனால் இந்தத் தாக்குதலுக்கு 3 நாட்களுக்கு முன்பே ரிபப்ளிக் டிவி ஆசிரியர் அர்னாப் இந்தத் தகவலைப் பகிர்ந்ததாக தகவல்கள் வெளியானதையடுத்து மத்திய அரசின் திட்டங்கள், ராணுவ ரகசியங்கள் ஒரு பத்திரிகையாளருக்கு எப்படி தெரியும் இது நாட்டின் பாதுகாப்புப் பிரச்சினை என்று சிவசேனா உள்ளிட்ட கட்சிகள் கடும் விமர்சனங்களை முன் வைத்தன.

  ரிபப்ளிக் டிவி' என்ற தனியார் செய்தி சேனலில் தலைமை செய்தி ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி மீது, தன் செய்தி சேனலை பிரபலப்படுத்துவதற்காக மோசடியில் ஈடுபட்டதாக வழக்குகள் தொடரப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

  இந்நிலையில் அர்னாப் கோஸ்வாமிக்கு முன்னதாகவே தெரிந்துள்ளதாக வெளியாகி உள்ள செய்தியை கிஸ்தானின் பிரதமர் இம்ரான் கான், கடும் கோபத்துடன் விமர்சித்துள்ளார்.

  இந்த பிரதேசத்தில் அமைதி குலைவதற்கு காரணமாக இந்தியா உள்ளது. அண்டை நாடுகளுடனான பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதற்கு, இந்தியா தயாராக இல்லை. தடுக்க வேண்டும். ஆனால், பிரச்னைகளை தீவிரப்படுத்தி வருகிறது. இதுபோன்ற செயல்களில் இந்தியா ஈடுபடுவதை, உலக நாடுகள் தடுக்க வேண்டும்.

  போர் வேட்கையில் உள்ள மோடி அரசின் நடவடிக்கைகள் குறித்து, ஒரு பத்திரிகையாளருக்கு முன்பே தெரிந்துள்ள தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளன. அப்போது நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெறுவதற்காக, இந்தப் பிராந்தியத்தின் எதிர்காலம் என்னவாகும் என்ற கவலையில்லாமல், மோடி அரசு செயல்பட்டுள்ளது.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.
  Published by:Muthukumar
  First published: