’முஸ்லிம்களுக்கும் பாகிஸ்தானுக்கும் எதிராக செயல்படும் பாஜக’- சாடும் இம்ரான் கான்

முஸ்லிம்களுக்கும் பாகிஸ்தானுக்கும் எதிராக பாஜக செயல்படுவதாகப் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.

Web Desk | news18
Updated: December 7, 2018, 8:25 PM IST
’முஸ்லிம்களுக்கும் பாகிஸ்தானுக்கும் எதிராக செயல்படும் பாஜக’- சாடும் இம்ரான் கான்
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்
Web Desk | news18
Updated: December 7, 2018, 8:25 PM IST
”இந்தியாவில் தேர்தல் நேரம் என்பதால் அந்நாட்டின் ஆளுங்கட்சி முஸ்லிம்களுக்கும் பாகிஸ்தானுக்கும் எதிராகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது” என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் குற்றம்சாட்டியுள்ளார்.

கடந்த நான்கு மாதங்களுக்கு முன்னர் பாகிஸ்தான் பிரதமராகப் பதவியேற்றதில் இருந்து தொடர்ந்து பாஜக-வைத் தாக்கி வருகிறார் அந்நாட்டுப் பிரதமர் இம்ரான் கான்.

இந்நிலையில்  வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையிடம் இம்ரான் அளித்த பேட்டியில், “இந்தியாவின் ஆளுங்கட்சி முஸ்லிம்களுக்கும் பாகிஸ்தானுக்கும் எதிரான நிலைப்பாடைக் கொண்டுள்ளது.

எல்லாம் அங்கு தேர்தல் வருவதால் தான். இந்தியா- பாகிஸ்தானுக்கு இடையே நடக்கவிருந்த அமைதிப் பேச்சுவார்த்தையை இந்தியா நிராகரித்துவிட்டது. என் வாழ்நாளில் சிறியோர் பலர் பெரிய பதவிகளில் எந்தவொரு தொலைநோக்குப் பார்வையும் இல்லாமல் செயல்படுவதை பார்த்துள்ளேன்.

சீக்கியர்களின் புனித யாத்திரைக்காக கர்தார்பூர் எல்லையை திறந்துவிடுவதில் இந்தியா நேர்மறையான முடிவு எடுக்கும் என நம்புகிறேன். இந்தியத் தேர்தல் முடிந்த பின்னர் மீண்டும் இந்தியா உடனான பேச்சுவார்த்தை தொடரும் என நம்புகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பார்க்க: மேடையில் திடீரென்று மயங்கி விழுந்த அமைச்சர் நிதின் கட்காரி
First published: December 7, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...