பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்துக்கு வரவேண்டிய விமானத்தை, தனது ஷிஃப்ட் முடிஞ்சு போச்சு என கூறி சவுதி அரேபியாவில் பாதி வழியிலேயே நிறுத்திவிட்டு விமானி ஒருவர் கிளம்பிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. விமானத்தை நிறுத்திவிட்டு விமானி சென்றதால் பயணிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பாகிஸ்தான் நாட்டின் தேசிய விமான நிறுவனமான பாகிஸ்தான் இண்டர்நேஷனல் ஏர்லைன்ஸுக்கு சொந்தமான விமானம் (PK-9754 ) ஒன்று ரியாத் நகரில் இருந்து இஸ்லாமாபாத்துக்கு புறப்பட்டது. இடையே வானிலை மோசமடைந்ததால், சவுதி அரேபியாவின் ரியாத் நகரில் அந்த விமானத்தை விமானி எமர்ஜென்ஸி லேண்டிங் செய்து அவசரமாக தரையிறக்கினார்.
பின்னர் வானிலை சரியானதால் விமானம் இஸ்லாமாபாத்துக்கு புறப்படும் என நினைத்த பயணிகளுக்கு விமானி அதிர்ச்சியளித்தார். தனது வேலை நேரம் (Flying Hours) நிறைவடைந்துவிட்டதாக கூறிய அவர் மேற்கொண்டு விமானத்தை தன்னால் இயக்க முடியாது என கூறி விமானத்தை இயக்க மறுத்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.
Also read:
புஷ்பா படம் பார்த்த உத்வேகத்தில் கொடூர கொலை சம்பவம்.. சீரழிந்த சிறுவர்கள்..
வானிலை மாற்றத்தால் ஏற்கனவே இஸ்லாமாபாத் செல்ல வேண்டிய விமானம் சில மணி நேரங்களாக தமாம் விமான நிலையத்தில் காத்திருக்க வேண்டியிருந்த நிலையில் மேற்கொண்டு தாமதமானதால் பொறுமையிழந்த பயணிகள் விமானத்தை இயக்கச் சொல்லி கூச்சல் போட்டுள்ளனர். தங்களால் விமானத்தை விட்டு இறங்க முடியாது என கூறி அவர்கள் போராட்டத்திலும் ஈடுபட்டனர். நிலைமை மோசமடைந்ததை அடுத்து விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் வரவழைக்கப்பட்டு நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
அந்த விமானத்தில் இருந்த பயணிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. பின்னர் அவர்கள் அனைவரும் தற்காலிகமாக ஓட்டல் ஒன்றுக்கு அழைத்துச் செல்லப்பட்டு தங்கவைக்கப்பட்டனர். இவர்கள் அனைவரும் மாற்று விமானி வந்தபின்னர் இஸ்லாமாபாத்துக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள் என விமான நிறுவனம் தரப்பில் கூறப்பட்டது.
Also read:
தந்தையின் சொத்தில் மகள்களுக்கு உரிமை - உச்சநீதிமன்றம் முக்கிய தீர்ப்பு
சர்வதேச விமான இயக்க விதிகளின்படி குறிப்பிட்ட மணி நேரங்களுக்கு பின்னர் விமானி கட்டாய ஓய்வு எடுக்க வேண்டும். விமானம் மற்றும் பயணிகளின் பாதுகாப்புக்கான இந்த விதி கட்டாயமாக கடைப்பிடிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.