Home /News /international /

பாகிஸ்தானில் மசூதியில் குண்டுவெடிப்பு.. 30 பேர் பலி, 50 நபர்கள் படுகாயம்

பாகிஸ்தானில் மசூதியில் குண்டுவெடிப்பு.. 30 பேர் பலி, 50 நபர்கள் படுகாயம்

மசூதியில் குண்டு வெடிப்பு

மசூதியில் குண்டு வெடிப்பு

peshwar பகுதியில் உள்ள  Kocha Risaldar மசூதியில் வெள்ளிக்கிழமை தொழுகையில் இஸ்லாமியர்கள் ஈடுபட்டிருந்தபோது இந்த வெடிகுண்டு விபத்து நிகழ்ந்துள்ளதாக போலீஸ் அதிகாரிகள் கூறியுள்ளனர். 

    பாகிஸ்தானின் பெஷாவர் பகுதியில் உள்ள மசூதி ஒன்றில் குண்டு வெடித்ததில் 30 பேர் பலியாகியுள்ளதாகவும் 50 பேர் காயமடைந்துள்ளதாகவும் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

    பாகிஸ்தானின் பெஷாவர் பகுதியில்  கிஸ்ஸா குவானி பஜாரில் உள்ள மசூதி ஒன்றில் 2 நபர்கள் நுழைந்து துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். மசூதியில் வாயிலில் இருந்த போலீஸை துப்பாக்கியால் அவர்கள் சுட்டதில் ஒருவர் உயிரிழந்தார் மற்றவர் படுகாயம் அடைந்தார்.

    இந்த நிகழ்வை தொடர்ந்து  மசூதியின் உள்ளே குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. Kocha Risaldar மசூதியில் வெள்ளிக்கிழமை தொழுகையில் இஸ்லாமியர்கள் ஈடுபட்டிருந்தபோது இந்த வெடிகுண்டு விபத்து நிகழ்ந்துள்ளதாக போலீஸ் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

    இதுவரை 30 உடல்கள் மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்டதாக அங்கிருந்தவர்கள் கூறுகின்றனர். 50க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்திருக்கலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த தாக்குதலுக்கு இதுவரை யாரும் பொறுப்பேற்கவில்லை.

    இதையும் படிங்க: உக்ரைனில் மேலும் ஒரு இந்தியர் சுடப்பட்டார்: மத்திய அமைச்சர் தகவல்


    மசூதியில் நிகழ்த்தப்பட்டுள்ள இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். காயம் அடைந்தவர்களுக்கு உடனடியாக சிகிச்சை வழங்கவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
    Published by:Murugesh M
    First published:

    Tags: Blast, Mosque

    அடுத்த செய்தி