• HOME
  • »
  • NEWS
  • »
  • international
  • »
  • பாலியல் வன்புணர்வு குற்றவாளிகளுக்கு இனி பாகிஸ்தானில் புதிய தண்டனை - எதிர்கட்சியினர் கண்டனம்..

பாலியல் வன்புணர்வு குற்றவாளிகளுக்கு இனி பாகிஸ்தானில் புதிய தண்டனை - எதிர்கட்சியினர் கண்டனம்..

Rape

Rape

பாகிஸ்தானில் நடைபெறும் பாலியல் வன்புணர்வு குற்ற வழக்குகளில் 4% அளவுக்கே தண்டனை கிடைப்பதாக கூறப்படுகிறது.

  • Share this:
தொடர்ச்சியாக பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு கடுமையான தண்டனைகள் அளிக்கும் சட்டத்திருத்தத்துக்கு பாகிஸ்தான் பாராளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.

பெண்கள், குழந்தைகள் மீதான பாலியல் வன்புணர்வு குற்றங்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. வளரும் நாடுகள் தொடங்கி வளர்ந்த நாடுகள் வரையிலும் இது பெரும் பிரச்னையாக இருந்து வருகிறது. இது போன்ற குற்றங்கள் சில நேரங்களில் பொதுமக்களின் கவனத்தை ஈர்த்து அவர்கள் வீதிகளில் இறங்கி போராட்டத்தை கையில் எடுத்து சட்டங்களை கடுமையாக்க வலியுறுத்துகின்றனர்.

பாலியல் வன்முறை குற்றங்களின் எண்ணிக்கை பாகிஸ்தானில் சமீப காலங்களில் கடுமையாக அதிகரித்ததால் இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடுவோருக்கு வழங்கப்படும் தண்டனையை கடுமையாக்க வேண்டும் என பொதுமக்கள் அந்நாட்டு அரசுக்கு அழுத்தம் கொடுத்தனர். இதனிடையே, பாலியல் குற்றங்களில் தொடர்ந்து ஈடுபடும் குற்றவாளிகளுக்கு ஆண்விதை நீக்கல் அல்லது ஆண்மை நீக்குதல் (Chemical Castration) தண்டனையை வழங்க வழிவகை செய்யும் சட்டத்துக்கு அந்நாட்டு பாராளுமன்றத்தில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

Also read:  சீனாவில் ஒரு ‘பரோட்டா சூரி’ சம்பவம்... பஃபேயில் அதிகம் சாப்பிட்டதால் மிரண்டு போன பிரபல உணவகம்..

பாகிஸ்தான் அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்ட புதிய பாலியல் வன்புணர்வு எதிர்ப்பு சட்டத்திற்கு பாகிஸ்தான் ஜனாதிபதி அரிஃப் அல்வி ஒப்புதல் அளித்து கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்குப் பிறகு இந்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.

புதிய சட்டத்தின்படி குற்றவாளிகளின் ஒப்புதலுடன் அவர்களுக்கு ஆண்மை நீக்கம் செய்யப்படும். இச்சட்டத்துடன் சேர்த்து 33 பிற சட்டங்களுக்கும் அமைச்சரவை ஒப்புதல் தந்துள்ளது. இது தவிர பாலியல் குற்றங்களை 4 மாதத்திற்குள் விசாரித்து நீதி வழங்க விரைவு நீதிமன்றங்கள் அமைக்க வேண்டும் எனவும் சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

Also read: பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட பேடிஎம் நிறுவனம்.. கண்ணீர் வடித்த பேடிஎம் நிறுவனர் விஜய் சேகர்

ஆண்மை நீக்குதல் செய்யப்பட்ட பின்னர், குற்றவாளி தனது வாழ்நாள் முழுதும் பெண்களுடன் உறவில் ஈடுபட இயலாமல் போகும். மருத்துவ ரீதியாக உடலில் செலுத்தப்படும் மருந்தின் மூலம் குற்றவாளியின் ஆண்மை நீக்கப்படும். இந்த தண்டனை சில அமெரிக்க மாகாணங்கள், தென் கொரியா, போலந்து, செக் குடியரசு போன்ற நாடுகளில் நடைமுறையில் இருந்து வருகிறது.

இதனிடையே ஜமாத்-இ-இஸ்லாமி கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரான முஷ்டாக் அகமது இந்த சட்டம் இஸ்லாமுக்கும், ஷரியாவுக்கு எதிரானது என்றார். பாலியல் வன்புணர்வு குற்றங்களில் ஈடுபடுவோரை பொதுஇடத்தில் வைத்து தூக்கில் இடவேண்டும் இதுபோல ஆண்மை நீக்கம் செய்ய வேண்டும் என ஷரியாவில் குறிப்பிடப்படவில்லை என்றார். பாகிஸ்தானில் நடைபெறும் பாலியல் வன்புணர்வு குற்ற வழக்குகளில் 4% அளவுக்கே தண்டனை கிடைப்பதாக கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Arun
First published: