Home /News /international /

பாகிஸ்தானின் அடுத்த பிரதமராக தேர்வு செய்யப்பட எதிர்க்கட்சி தலைவர் ஷபாஸ் ஷரீபிற்கு அதிக வாய்ப்பு...

பாகிஸ்தானின் அடுத்த பிரதமராக தேர்வு செய்யப்பட எதிர்க்கட்சி தலைவர் ஷபாஸ் ஷரீபிற்கு அதிக வாய்ப்பு...

பாகிஸ்தான் எதிர்க்கட்சி தலைவர் ஷாபாஸ் ஷரீப்

பாகிஸ்தான் எதிர்க்கட்சி தலைவர் ஷாபாஸ் ஷரீப்

பாகிஸ்தானை கட்டுப்படுத்தும் அதிகாரம் கொண்ட ராணுவத்திற்கும், ஷரீபுக்கும் இடையே நல்லுறவு உள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
பாகிஸ்தானின் அடுத்த பிரதமராக தேர்வு செய்யப்படுவதற்கு எதிர்க்கட்சி தலைவரான ஷபாஸ் ஷரீபிற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் பிரதமா் இம்ரான் கானுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீா்மானம் மீது நேற்றிரவு நடத்தப்பட்ட வாக்கெடுப்பு வெற்றி பெற்றதையடுத்து, அவரது தலைமையிலான அரசு கவிழ்ந்தது.

342 உறுப்பினர்களைக் கொண்ட பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் ஒரு கட்சி பெரும்பான்மையை பெறுவதற்கு 172 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு இம்ரான் கானின் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி பாகிஸ்தானில் ஆட்சியமைத்து வந்தது. அதன் கூட்டணி கட்சி எம்பிக்கள் சிலர் ஆதரவை திரும்ப பெற்றனர். இதையடுத்து இம்ரான் கான் அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்க்கட்சிகள் கொண்டு வந்தன. இதன் மீதான வாக்கெடுப்பு நடைபெறவிருந்த நிலையில், சில நாட்களுக்கு முன்பாக இம்ரான் கானின் பரிந்துரையின்பேரில் நாடாளுமன்றத்தை சபாநாயகர் கலைத்தார்.

இதையும் படிங்க -

சபாநாயகர் நாடாளுமன்றத்தை கலைத்ததை எதிர்த்து எதிர்க்கட்சிகள் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதில், நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது செல்லாது என்று நேற்று முன்தினம் உத்தரவு வெளியானது. மேலும், நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதன்படி, நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடத்த நேற்று நாடாளுமன்றம் கூடியது. கவன ஈா்ப்பு தீா்மானம் கொண்டுவந்த எதிா்க்கட்சித் தலைவா் ஷாபாஸ் ஷெரீஃப்க்கு எதிராக, ஆளுங்கட்சி உறுப்பினா்கள் தொடா் அமளியில் ஈடுபட்டு இடையூறு செய்தனா். இதனால், அவை பலமுறை ஒத்திவைக்கப்பட்டது.

இதற்கிடையே, பிரதமா் இம்ரான் கான் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் இரவில் நடைபெற்றது. அதில், பிரதமா் பதவியை இம்ரான் கான் ராஜிநாமா செய்ய மாட்டார் என முடிவெடுக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவித்தன.

இதையும் படிங்க: Citizenship Amendment Act: குடியுரிமை (திருத்த) சட்டத்துக்கான விதிகளை இறுதி செய்ய அவகாசம் கேட்கும் மத்திய அரசு

இதையடுத்து, நள்ளிரவு 12 மணிக்கு மேல் அவை மீண்டும் கூடியது. அப்போது அவைத் தலைவா் ஆசாத் கைஸரும், துணைத் தலைவா் காசிம் சுரியும் ராஜிநாமா செய்வதாக அறிவித்தனா். இதையடுத்து, எதிர்க்கட்சியான பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (என்)-ஐ சோ்ந்த அயாஷ் சாதிக் அவைக்கு தலைமை வகித்து வாக்கெடுப்பு நடவடிக்கைகளைத் தொடங்கினார்.

342 உறுப்பினா்கள் கொண்ட நாடாளுமன்ற கீழவையில் தீா்மானம் வெற்றி பெற 172 வாக்குகள் தேவை என்ற நிலையில், தீா்மானத்துக்கு ஆதரவாக 174 போ் வாக்களித்ததாக தற்காலிக அவைத் தலைவா் அறிவித்தார். இதையடுத்து, இம்ரான் கான் தலைமையிலான அரசு கவிழ்ந்தது.

இந்நிலையில் பாகிஸ்தானின்அடுத்த பிரதமராக தேர்வு செய்யப்படுவதற்கு எதிர்க்கட்சி தலைவராக இருக்கும் ஷாபாஸ் ஷரீபுக்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 70 வயதாகும் ஷரீப், இம்ரான் கானின் ஆட்சியை கவிழ்த்ததில் முக்கிய பங்கை வகித்துள்ளார்.

பாகிஸ்தானை கட்டுப்படுத்தும் அதிகாரம் கொண்ட ராணுவத்திற்கும், ஷரீபுக்கும் இடையே நல்லுறவு உள்ளது. இவர் ஏற்கனவே பஞ்சாப் மாகாண முதல்வராக பொறுப்பில் இருந்துள்ளார். அப்போது, சீனாவுடன் இணைந்து பல திட்டங்களை மாகாணத்திற்கு அவர் கொண்டு வந்திருக்கிறார். அடுத்த பிரதமர் யார் என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எந்த நேரத்திலும் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Published by:Musthak
First published:

Tags: India and Pakistan

அடுத்த செய்தி