மும்பைத் தாக்குதலின் மூளையாக கருதப்படும் ஹஃபிஸ் சயீத்தின் ஜமாத் உத் தவா அமைப்புக்கு பாகிஸ்தானில் மீண்டும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் இந்தியா தாக்கினால் பதிலடி கொடுக்க பாகிஸ்தான் ராணுவம் தயாராக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மும்பையில் 2008 ஆண்டு தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 166 பேர் உயிரிழந்தார்கள். அதன் மூளையாக கருதப்படும் ஹஃபிஸ் சயீத்தின் அமைப்புதான் ஜமாத் உத் தவா. பயங்கரவாத இயக்கமான லஷ்கர் இ தொய்பாவின் அறக்கட்டளையாக இது கருதப்படுகிறது.
பாகிஸ்தானில் 30 குருகுலங்கள், பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவமனைகள் என பெரும் அறக்கட்டளையாக திகழும் ஜமாத் உத் தவாவில் சுமார் 50 ஆயிரம் தன்னார்வலர்கள் இருக்கிறார்கள்.
பாகிஸ்தான் அரசின் கண்காணிப்பில் இருந்துவந்த Falah-i-Insaniyat என்ற அதன் அறக்கட்டளைக்கு தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது. பிரதமர் இம்ரான் கான் தலைமையில் நடந்த தேசிய பாதுகாப்புக் குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு பிப்ரவரியில் அதிபராக இருந்த மம்மூத் ஹூசைன் இந்த அமைப்புக்குத் அவசரச் சட்டம் மூலம் தடை விதித்தபோதும் அது விரைவிலேயே காலாவதியானது.
தற்போது காஷ்மீரில் நடந்த தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டதால் தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கை எடுக்கும் நெருக்கடிக்கு உள்ளான பாகிஸ்தான் மீண்டும் தடை விதித்துள்ளது. இந்தியா தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுக்க தயாராக இருக்குமாறு ராணுவத்திற்குஅறிவுறுத்தியுள்ளது.
அதேநேரம் காஷ்மீர் தீவிரவாத தாக்குதலுக்கு காரணமான ஜெய்ஸ் இ முகமது பற்றி பாகிஸ்தான் அரசு எதுவும் கூறவில்லை. இந்நிலையில் புல்வாமா தாக்குதலைக் கண்டித்துள்ள ஐக்கிய நாடுகள் சபையில் பாதுகாப்பு கவுன்சில் கோழைத்தனமான தாக்குதல் என கூறியுள்ளது.
விசாரணையில் அனைத்து நாடுகளும் இந்தியாவுக்கு ஒத்துழைக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளது.
Also Watch: 5,8 வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு… புதிய குலக்கல்வி ஆரம்பா?
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Pakistan Army, Pulwama