தாலிபான்களை ஆதரிக்கவில்லை எனில் இன்னொரு 9/11 தாக்குதலை சந்திக்க நேரிடும்: எச்சரித்த பாகிஸ்தான் பிற்பாடு பல்டி

பாக். தேசியப் பாதுகாப்பு ஆலோசகர்.

பாகிஸ்தான் தேசியப் பாதுகாப்பு ஆலோசகரான மொயீத் யூசுப் சண்டே டைம்ஸ் என்ற பிரிட்டிஷ் செய்தித் தாளின் நிருபர் கிறிஸ்டினா லேம்புக்கு அளித்த பேட்டியில் தாலிபான்கள மேற்கு நாடுகள் அங்கீகரிக்கவில்லை எனில் இன்னொரு 9/11 பயங்கரவாதத் தாக்குதலைத்தான் எதிர்கொள்ள வேண்டி வரும் என்று எச்சரித்ததாக செய்திகள் வெளியாகின. ஆனால் இதனை பாகிஸ்தான் மறுத்துள்ளது.

 • Share this:
  பாகிஸ்தான் தேசியப் பாதுகாப்பு ஆலோசகரான மொயீத் யூசுப் சண்டே டைம்ஸ் என்ற பிரிட்டிஷ் செய்தித் தாளின் நிருபர் கிறிஸ்டினா லேம்புக்கு அளித்த பேட்டியில் தாலிபான்கள மேற்கு நாடுகள் அங்கீகரிக்கவில்லை எனில் இன்னொரு 9/11 பயங்கரவாதத் தாக்குதலைத்தான் எதிர்கொள்ள வேண்டி வரும் என்று எச்சரித்ததாக செய்திகள் வெளியாகின. ஆனால் இதனை பாகிஸ்தான் மறுத்துள்ளது.

  “Work with the Taliban or Repeat the Horror of the 1990s, West Told”, அதாவது தாலிபான்களுடன் இணைந்து பணியாற்றுங்கள் இல்லையெனில் 1990களின் பயங்கரம் திரும்பும், மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை என்ற தலைப்பில் வெளியான பேட்டி குறித்து பாகிஸ்தான் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் மொயித் யூசுப் சண்டே டைம்ஸ் பத்திரிகை தவறாகச் சித்தரித்துள்ளது என்று கண்டனம் வெளியிட்டுள்ளார்.

  இந்தப் பேட்டியை வெளியிடக் கூடாது அல்லது மறுப்பு தெரிவிக்கக் கோரி பாகிஸ்தான் தூதரகம் சண்டே டைம்ஸுக்கு எழுதியுள்ளது. சண்டே டைம்ஸின் அயல்நாட்டு தலைமை செய்தியாளராக இருக்கும் கிறிஸ்டியானா லேம்ப் விருது வென்ற பத்திரிகையாளர் ஆவார்.

  அவர், நேர்காணல் பதிவு செய்யப்பட்டுள்ளது, எதுவும் தவறாக மேற்கோள் காட்டப்படவில்லை என்று திட்டவட்டமாக தன் சமூக ஊடகப்பக்கத்தில் தெரிவித்தார்.

  டைம்ஸ் நேர்காணலில் பாகிஸ்தான் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் கூறியது இதுதான்: என்னுடைய வார்த்தைகளை குறித்துக் கொள்ளுங்கள். 90களின் தவறுகள் மீண்டும் செய்யப்பட்ட ஆப்கானிஸ்தானை ஒதுக்கினால் முடிவு அதே தான் என்று கூறியுள்ளார்.

  இதைத்தான் திரித்து ஆப்கான் தாலிபான்களை அங்கீகரிக்கவில்லை எனில் 9/11 தாக்குதல் ரிபீட் ஆகும் என்று தலைப்பிட்டுள்ளதாக மொயீத் யூசுப் குற்றம் சாட்டியுள்ளது.

  இந்த நேர்காணல் ஆகஸ்ட் 27ம் தேதி பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அலுவலகத்தில் ரெக்கார்ட் செய்யப்பட்டது. இந்த ரெக்கார்டிங் அனைத்தையும் லேம்ப் வெளியிட வேண்டும் என்று தற்போது பாகிஸ்தான் சண்டே டைம்ஸுக்கு கோரியுள்ளது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  ஸ்கை நியூஸிலும் இதே போல் பேச்சு:

  சண்டே டைம்ஸ் நேர்காணலை மறுக்கும் பாகிஸ்தான் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் இதற்கு முந்தைய ஸ்கை சேனல் நேர்காணலிலும் இதே தொனியில் பேசியுள்ளார் என்று பிரிட்டன் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

  அதன் தலைப்பு இதோ: மேற்கு நாடுகள் இன்னொரு 9/11-ஐச் சந்திக்கும் பெரிய அளவில் அகதிகள் பிரச்னைகள் ஏற்படும், என்று பாகிஸ்தான் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் கூறியதாக வெளியானது.
  Published by:Muthukumar
  First published: