Home /News /international /

பாகிஸ்தான் : இரவு 8 மணிக்கு மேல் நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான வாக்கெடுப்பு?

பாகிஸ்தான் : இரவு 8 மணிக்கு மேல் நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான வாக்கெடுப்பு?

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்

இன்று வாக்கெடுப்பு நடைபெறவிருந்த நிலையில், இம்ரான் கான் கட்சியை சேர்ந்த எவரும் நாடாளுமன்றத்திற்கு வரவில்லை.

பாகிஸ்தானில் இம்ரான் கான் அரசு மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு இன்றிரவு 8 மணிக்கு மேல் நடைபெறும் என தகவல்கள் வெளியாகி உள்ளது.

342 உறுப்பினர்களைக் கொண்ட பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் ஒரு கட்சி பெரும்பான்மையை பெறுவதற்கு 172 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு இம்ரான் கானின் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி பாகிஸ்தானில் ஆட்சியமைத்து வருகிறது. அதன் கூட்டணி கட்சி எம்பிக்கள் சிலர் ஆதரவை திரும்ப பெற்றனர்.

இதையடுத்து இம்ரான் கான் அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்க்கட்சிகள் கொண்டு வந்தன. இதன் மீதான வாக்கெடுப்பு நடைபெறவிருந்த நிலையில், சில நாட்களுக்கு முன்பாக இம்ரான் கானின் பரிந்துரையின்பேரில் நாடாளுமன்றத்தை சபாநாயகர் கலைத்தார்.

இதையும் படிங்க - பையில் 90,000 டாலர் பணமா? துபாய் பறந்த இம்ரான் கானின் பினாமி மீது எதிர்க்கட்சிகள் புகார்!

இதன்பின்னர் தொலைக்காட்சியில் பேசிய இம்ரான் கான், பாகிஸ்தானில் ஆட்சியைக் கைப்பற்ற வெளிநாட்டு சதி நடப்பதாகவும், பாகிஸ்தான் எதிர்காலத்தை சொந்த நாட்டு மக்கள்தான் தீர்மானிக்க வேண்டும் எனவும் பேசினார்.

சபாநாயகர் நாடாளுமன்றத்தை கலைத்ததை எதிர்த்து எதிர்க்கட்சிகள் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதில், நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது செல்லாது என்று நேற்று முன்தினம் உத்தரவு வெளியானது.

உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை தொடர்ந்து, இன்றைக்கு இம்ரான் அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில் இன்று வாக்கெடுப்பு நடைபெறவிருந்த நிலையில், இம்ரான் கான் கட்சியை சேர்ந்த எவரும் நாடாளுமன்றத்திற்கு வரவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படிங்க - இலங்கை நெருக்கடிக்கு தீர்வு காணப்படவில்லை என்றால், அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்.. எதிர்க்கட்சி எச்சரிக்கை!

தொடர்ந்து அவையில் கூச்சல் குழப்பங்கள் காணப்பட்டது. தற்போது வெளியாகியிருக்கும் தகவலின்படி இன்றிரவு 8 மணிக்கு மேல் வாக்கெடுப்பு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

போதுமான உறுப்பினர்களின் ஆதரவு இம்ரான் கான் கட்சிக்கு இல்லை என்று கூறப்படுவதால் அவரது தலைமையிலான அரசு கவிழ்வதற்கு, அதிக வாய்ப்புகள் இருப்பதாக அரசியல் பார்வையாளர்கள் கணித்துள்ளனர்.
Published by:Musthak
First published:

Tags: Imran khan

அடுத்த செய்தி