பாகிஸ்தானில் இம்ரான் கான் அரசுக்கு எதிரான, நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் நிராகரிக்கப்பட்டுள்ளது. மேலும் பாகிஸ்தான் நாடாளுமன்றத்தை கலைப்பதற்கு இம்ரான் கான் பரிந்துரை செய்துள்ளார்.
புதிய தேர்தலுக்கு தயார் ஆகுங்கள் என்று நாட்டு மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ள பிரதமர் இம்ரான் கான், பாகிஸ்தான் எதிர்காலத்தை நீங்களே தீர்மானியுங்கள் என்று வாக்காளர்களுக்கு தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானின் அரசியலமைப்பு சட்டம் விதி 5-இன் படி நம்பிக்கை இல்லா தீர்மானம் நிராகரிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க - பாக். பிரதமர் இம்ரான் கானின் பதவி தப்புமா? நாடாளுமன்றத்தில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு
342 உறுப்பினர்களைக் கொண்ட பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் குறைந்தது 172 உறுப்பினர்களின் ஆதரவு இருந்தால் மட்டுமே இம்ரான் கானின் அரசு நீடிக்கும். தற்போது இம்ரான் கானுக்கு கூட்டணி கட்சிகள் உள்பட 179 பேரின் ஆதரவு உள்ளது. இதில் 10-க்கும் அதிகமானோர் இன்று நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பில் அவருக்கு எதிராக வாக்களிப்பார்கள் என்று தகவல்கள் வெளியானது.
இந்த நிலையில், நம்பிக்கையில்லா தீர்மானத்தை நிராகரித்து புதிய தேர்தலுக்கு அழைப்பு விடுத்துள்ளார் இம்ரான் கான்.
இதையும் படிங்க - கிரிக்கெட் வீரராக வாழ்க்கையை தொடங்கி பாகிஸ்தான் பிரதமராக உயர்ந்த இம்ரான் கான்...
இம்ரான் கானுக்கு எதிராக பாகிஸ்தான் முஸ்லிம் லீக் பி.எம்.எல்.-என் கட்சியும், பாகிஸ்தான் பீப்பிள் பார்ட்டி கட்சியும் களத்தில் உள்ளன. நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றுவிடுவேன் என்று நேற்று கூறியிருந்த இம்ரான் கான், இதுபற்றி கட்சியினர் கவலைப்பட வேண்டாம் என்று தெரிவித்திருந்தார்.
நாடாளுமன்றத்தை கலைக்க வேண்டும் என்று இம்ரான் கான் பரிந்துரை செய்திருக்கும் நிலையில், புதிய தேர்தல் தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.