காஷ்மீர் மட்டுமல்ல குஜராத்தையும் தங்களோடு சேர்த்து பாகிஸ்தான் புதிய வரைபடம்

பாகிஸ்தான் சமீபத்தில் வெளியிட்டுள்ள அந்நாட்டு வரைபடத்தை இந்தியா நிராகரித்துள்ளது

காஷ்மீர் மட்டுமல்ல குஜராத்தையும் தங்களோடு சேர்த்து பாகிஸ்தான் புதிய வரைபடம்
புதிய அரசியல் வரைபடம்
  • News18
  • Last Updated: August 5, 2020, 9:19 AM IST
  • Share this:
பாகிஸ்தான் பிரதமர் சமீபத்தில் அந்நாட்டின் புதிய வரைபடத்தை வெளியிட்டுள்ளார். இந்தியாவின் காஷ்மீர் பகுதி மற்றும், குஜராத்தின் ஜுனாகத் ஆகிய பகுதிகளை பாகிஸ்தானுக்கு சொந்தமான பகுதிகளாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

புதிய வரைபடத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாகவும், இது பாகிஸ்தான் மக்களின் லட்சியத்தை குறிப்பதாகவும் இம்ரான் கான் தெரிவித்துள்ளார். ஆனால், பாகிஸ்தானின் இந்த வரைபடத்தை முற்றிலும் நிராகரித்துள்ள மத்திய அரசு, இது தொடர்பாக கண்டனங்களையும் பதிவு செய்துள்ளது.

இது தொடர்பாக வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘அரசியல் வரைபடம் என்ற பெயரில் பிரதமர் இம்ரான்கான் வெளியிட்டுள்ள வரைபடத்தை நாங்கள் பார்த்தோம். இது ஒரு அரசியல் அபத்தமான நடவடிக்கை.


மேலும் இந்தியாவின் குஜராத் மற்றும் எங்களின் காஷ்மீர் லடாக் யூனியன் பிரதேங்களை உரிமை கோருவதை ஏற்க முடியாது. இந்த அபத்தமான கூற்றுகள் சட்டப்படி செல்லுபடியாகும் நிலையிலோ, சர்வதேச நம்பகத்தன்மையிலோ இல்லை’ என்று குறிப்பிட்டு உள்ளது.
First published: August 5, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading