• HOME
  • »
  • NEWS
  • »
  • international
  • »
  • நந்திதா தாஸ்-க்கு உதவத் தயார்! பாகிஸ்தான் அமைச்சர் உத்தரவாதம்

நந்திதா தாஸ்-க்கு உதவத் தயார்! பாகிஸ்தான் அமைச்சர் உத்தரவாதம்

நந்திதா தாஸ் இயக்கத்தில் வெளிவந்த மன்டோ திரைப்படத்துக்குப் ஆதரவு தெரிவித்து சமூக ஆர்வலர்கள், எழுத்தாளர்கள், படைப்பாளிகள் எனப் பலரும் பாகிஸ்தான் பிரதமருக்குக் கையெழுத்துக் கடிதம் அனுப்பி உள்ளனர்.

  • News18
  • Last Updated :
  • Share this:
திரைப்பட இயக்குநர் நந்திதா தாஸ்-க்கு உதவி செய்வதாகப் பாகிஸ்தானின் தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் ஃபாவத் சவுத்ரி உத்தரவாதம் அளித்துள்ளார்.

நடிகையும் இயக்குநருமான நந்திதா தாஸ் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான படம் ‘மன்டோ’. இத்திரைப்படம் இந்தியாவிலேயே பல இடங்களில் வெளியாகவில்லை.

பாகிஸ்தானிலும் இத்திரைப்படத்துக்குத் தடை விதிக்கப்பட்டது. மன்டோ அன்றைய பிரிட்டிஷ் இந்தியாவில் பிறந்த பாகிஸ்தான் எழுத்தாளராக அடையாளம் காணப்படுகிறார்.

மன்டோவின் வாழ்க்கை வரலாறாக வெளிவந்தத் திரைப்படம் தான் ‘மன்டோ’. இத்திரைப்படத்துக்குப் பாகிஸ்தானில் தடை விதிக்கப்பட்ட பின்னர் மிகவும் மன வேதனையில் இயக்குநர் நந்திதா தாஸ் தன் ட்விட்டர் பக்கத்தில், “பாகிஸ்தான் திரையரங்குகளில் ‘மன்டோ’ வெளியிடப்படாமல் இருப்பது மிகவும் வேதனை அளிக்கிறது. அவர் இரண்டு நாடுகளைச் சேர்ந்தவர் தான்” எனக் குறிப்பிட்டிருந்தார்.

இந்த ட்விட்டர்பதிவுக்கு பாகிஸ்தானின் தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் ஃபாவத் சவுத்ரி பதிலளித்துள்ளார். அதில், “இத்திரைப்படத்தை பாகிஸ்தானில் இறக்குமதி செய்ய நான் மிகவும் முயற்சி செய்து வருகிறேன். நிச்சயமாக யாராவது ஒருவர் இதுபோன்ற கமர்ஷியல் குறைவாக உள்ளத் திரைப்படங்களை இம்மக்களுக்குக் காண்பிப்பர் என நம்புகிறேன்” எனக் கூறியுள்ளார்.



இத்திரைப்படத்துக்கு ஆதரவு தெரிவித்து பாகிஸ்தானின் சமூக ஆர்வலர்கள், எழுத்தாளர்கள், படைப்பாளிகள் எனப் பலரும் இணைந்து பாகிஸ்தான் பிரதமருக்குக் கையெழுத்துக் கடிதம் அனுப்பி உள்ளனர். இந்தக் கடிதத்தில் மன்டோவின் மகள்கள் மூவரும் கையெழுத்திட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பார்க்க: புரோ கபடி லீக் - அடித்து நொறுக்கும் குஜராத்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Rahini M
First published: