முகப்பு /செய்தி /உலகம் / “எங்களிடமும் அணு ஆயுதம் இருக்கு.. இந்தியா மறந்திட வேண்டாம்” பாகிஸ்தான் அமைச்சர் பேச்சால் சர்ச்சை!

“எங்களிடமும் அணு ஆயுதம் இருக்கு.. இந்தியா மறந்திட வேண்டாம்” பாகிஸ்தான் அமைச்சர் பேச்சால் சர்ச்சை!

பாக். அமைச்சர் ஷாஜியா

பாக். அமைச்சர் ஷாஜியா

ஐ.நா கூட்டத்தில் பேசிய பாகிஸ்தான் அமைச்சர் பிலாவல் பூட்டோ, பிரதமர் மோடியை கசாப்புக் கடைக்காரர் என குறிப்பிட்டு பேசினார்

  • 1-MIN READ
  • Last Updated :
  • inter, IndiaPakistanPakistan

பாகிஸ்தானிடம் அணு ஆயுதங்கள் இருப்பதை இந்தியா மறந்துவிட வேண்டாம் என அச்சுறுத்தும் வகையில் பாகிஸ்தான் அமைச்சர் ஷாஜியா மாரி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணத்தில் நடைபெற்ற ஐ.நா கூட்டத்தில் பேசிய பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் பிலாவல் பூட்டோ, பிரதமர் மோடியை கசாப்புக் கடைக்காரர் என குறிப்பிட்டு பேசினார். இதற்கு கண்டனம் தெரிவித்த இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம், பாகிஸ்தானுக்கு இது ஒரு புதிய தாழ்வு எனவும், பயங்கரவாதிகளை ஆதரிக்கும் மேக் இன் பாகிஸ்தான் திட்டத்தை நிறுத்திகொள்ள வேண்டும் எனவும் பதிலடி கொடுத்தது.

இந்நிலையில் செய்தியாளர் கூட்டத்தில் பேசிய பாகிஸ்தான் மக்கள் கட்சித் தலைவர் ஷாஜியா மாரி "பாகிஸ்தானிடம் அணு ஆயுதங்கள் உள்ளது என்பதை இந்தியா மறந்துவிடக் கூடாது, அணுசக்தி உருவாக்கியது அமைதியாக வைத்திருப்பதற்காக அல்ல, தேவை ஏற்பட்டால் நாங்கள் பின்வாங்க மாட்டோம் எனவும் கூறினர். அமைச்சரின் இந்த கருத்து தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

First published:

Tags: Nuclear, Pakistan Army, PM Modi