Home /News /international /

பாகிஸ்தானில் சிறுபான்மையினரான இந்துக்கள் குறித்து விமர்சித்த அமைச்சர் நீக்கம்

பாகிஸ்தானில் சிறுபான்மையினரான இந்துக்கள் குறித்து விமர்சித்த அமைச்சர் நீக்கம்

நீக்கப்பட்ட அமைச்சர்

நீக்கப்பட்ட அமைச்சர்

இந்துக்கள் சிலை வழிபாடு செய்பவர்கள். நாங்கள் அப்படி சிலை வழிபாடு செய்வது இல்லை. நாங்கள் செய்யும் வழிபாட்டை இந்தியர்களால் செய்ய இயலாது என தெரிவித்திருந்தார்.

  • News18
  • Last Updated :
    பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் அமைச்சர் ஒருவர் இந்துக்கள் குறித்து கடுமையாக விமர்சித்திருந்த நிலையில், அவரை பதவி நீக்கம் செய்து மாகாண அரசு உத்தரவிட்டுள்ளது.

    பாகிஸ்தானில் இந்துக்கள், சீக்கியர்கள், கிறிஸ்தவர்கள், பார்சிகள் உள்ளிட்ட பல இனங்கள் சிறுபான்மையினமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அந்நாட்டில் உள்ள பஞ்சாப் மாகாணத்தில் செய்தி மற்றும் கலாசார அமைச்சராக இருக்கும் பையாசூல் ஹசன்சோகன் என்பவர் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு சமீபத்தில் பேட்டி அளித்தார்.

    அதில், “இந்தியாவில் உள்ள இந்துக்கள் அனைவரும் பசுவின் மூத்திரத்தை குடித்து வாழ்பவர்கள். அவர்களை போல பாகிஸ்தானியர்கள் இல்லை. பாகிஸ்தான் நாட்டு மக்களுக்கு தனி கொடி இருக்கிறது. தனி அடையாளம் இருக்கிறது. ஆனால் இந்தியாவில் உள்ள இந்துக்களுக்கு அப்படி எந்த அடையாளமும் இல்லை.

    இந்தியாவில் இந்துக்கள் சிலை வழிபாடு செய்பவர்கள். நாங்கள் அப்படி சிலை வழிபாடு செய்வது இல்லை. நாங்கள் செய்யும் வழிபாட்டை இந்தியர்களால் செய்ய இயலாது” என தெரிவித்திருந்தார்.

    பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், உள்பட பல்வேறு கட்சி தலைவர்களும் மந்திரி சோகனின் கருத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் போர்க்கொடி உயர்த்தினர்.

    இந்நிலையில், இந்துக்களை தரக்குறைவாக விமர்சித்த பையாசூல் ஹசன் சோகன் அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டு உள்ளார்.

     
    Published by:Sankar
    First published:

    Tags: PM Imran Khan

    அடுத்த செய்தி