ஹோம் /நியூஸ் /உலகம் /

பாகிஸ்தானை உலுக்கிய கவுரவக் கொலைகள்.. ஒரே குடும்பத்தினர் 7 பேர் எரித்துக் கொலை!

பாகிஸ்தானை உலுக்கிய கவுரவக் கொலைகள்.. ஒரே குடும்பத்தினர் 7 பேர் எரித்துக் கொலை!

Honour killing

Honour killing

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஏழு பேர் கவுரவக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பாகிஸ்தானை உலுக்கியுள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

தனது விருப்பதுக்கு மாறாக மகள்கள் திருமணம் செய்ததால் குடும்ப உறுப்பினர்கள் ஏழு பேரை கவுரவக் கொலைகள் செய்து அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறார் பாகிஸ்தானைச் சேர்ந்த தந்தை ஒருவர்.

கவுரவக் கொலைகள் என்பது இந்தியாவில் அவ்வப்போது நடக்கக்கூடியது, இதற்கு பாகிஸ்தானும் விதிவிலக்கல்ல. அங்கும் கவுரவக் கொலைகள் அரங்கேறிக் கொண்டுதான் வருகின்றன. தந்தை ஒருவர் தனது கவுரவத்துக்காக தனது இரண்டு மகள்கள், நான்கு பேரக்குழந்தைகள் உள்ளிட்ட 7 பேரை கொலை செய்திருப்பது ரத்தத்தை உறைவைப்பதாக அமைந்துள்ளது.

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம் முசாஃபர்கர் மாவட்டத்தைச் சேர்ந்த மன்சூர் ஹூசைன் தான் இந்த கொடூர செயலை செய்தவர். மன்சூருக்கு, 35 வயதாகும் குர்ஷித் மை மற்றும் 19 வயதாகும் ஃபவுசியா பீபி என இரண்டு மகள்கள் உள்ளனர். இதில் மூத்த மகளான குர்ஷித் மை தனது தந்தையின் விருப்பத்துக்கு மாறாக ஏற்கனவே காதல் திருமணம் புரிந்து கொண்டு தனது கணவருடன் தனியாக வசித்து வந்துள்ளார்.

Also read:  சரியும் சீன பொருளாதாரம்.. கொரோனாவை வென்றது.. மின்சாரத்திடம் தோற்றது..

குர்ஷித் மைக்கு 13, 6 மற்றும் இரண்டு வயதுடைய 3 பிள்ளைகள் உள்ளனர். குர்ஷித்தின் இளைய சகோதரி ஃபவுசியா பீபி தனது தந்தையின் விருப்பத்துக்கு எதிராக கடந்த 2020ம் ஆண்டு அகமது என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டு தனது சகோதரியுடன் வசித்து வந்திருக்கிறார். இவருக்கு நான்கு மாத குழந்தை உள்ளது.

இதனிடையே தனது மகள்கள் இருவரும் தனது விருப்பத்தை மீறி காதல் திருமணம் செய்து கொண்டதால் மகள்கள் மீது கடும் கோவத்தில் இருந்து வந்திருக்கிறார் மன்சூர் ஹூசைன். இந்நிலையில் தனது மகள்கள் மற்றும் பேரக்குழந்தைகள் வசித்து வந்த வீட்டுக்கு, தனது மகன் அப்துல் மஜீத்துடன் சென்ற மன்சூர் அந்த வீட்டுக்கு தீ வைத்து அனைவரையும் எரித்துக் கொலை செய்துள்ளார்.

Also read: பில் கேட்ஸ் வீழ்ச்சிக்கு இந்த பெண் தான் காரணமா? – பில் கேட்ஸை 2008ல் எச்சரித்த மைக்ரோசாஃப்ட் நிறுவனம்!

இந்த கோர சம்பவத்தில் இரண்டு மகள்கள், நான்கு பேரக் குழந்தைகள், குர்ஷித் மையின் கணவர் என ஏழு பேர் உடல் கருகி உயிரிழந்துள்ளனர்.

இச்சம்பவத்தில் தப்பி பிழைத்த ஃபவுசியா பீபியின் கணவர் அகமது போலீஸ் விசாரணையில் கூறுகையில், சம்பவம் நடந்த போது நான் முல்தானுக்கு தொழில் விஷயமாக சென்றிருந்தேன். வீட்டுக்கு திரும்பி வந்த போது என் வீடு தீக்கிரையாக்கப்பட்டிருந்தது. என்னைப் பார்த்ததும் என் மாமனார் மன்சூர் மற்றும் அவரின் மகன் மஜீத் ஆகியோர் அங்கிருந்து தப்பியோடினர் என கூறினார்.

Also read: பெட்டில் படுத்துக்கொண்டே நெட்ஃபிளிக்ஸில் படம் பார்த்தால் ரூ.25 லட்சம் சம்பளம்!

இதனிடையே தலைமறைவாக இருக்கும் தந்தை மன்சூர் ஹூசைன், அவருடைய மகன் மஜீத் ஆகிய இருவரையும் போலீசார் தேடி வருகிறார்கள். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஏழு பேர் கவுரவக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பாகிஸ்தானை உலுக்கியுள்ளது.

மனித உரிமைகள் அமைப்பின் தகவல்படி பாகிஸ்தானில் ஆண்டுதோறும் சுமார் 1000 கவுரவக் கொலை குற்ற சம்பவங்கள் நடைபெறுவதாக கூறப்பட்டுள்ளது.

First published:

Tags: Honour killing, Pakistan News in Tamil