ஹோம் /நியூஸ் /உலகம் /

'பட்டாசு வேண்டாம்.. துப்பாக்கி எடு..' பாகிஸ்தானில் துப்பாக்கியால் சுட்டு புத்தாண்டு கொண்டாட்டம்.. 22 பேர் காயம்!

'பட்டாசு வேண்டாம்.. துப்பாக்கி எடு..' பாகிஸ்தானில் துப்பாக்கியால் சுட்டு புத்தாண்டு கொண்டாட்டம்.. 22 பேர் காயம்!

துப்பாக்கிச் சூடு

துப்பாக்கிச் சூடு

பாகிஸ்தானில் புத்தாண்டை துப்பாக்கியால் சுட்டு விநோதமாக கொண்டாடிய நிலையில், 22 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • international, Indiapakistanpakistan

உலகம் முழுவதும் 2023 ஆங்கில புத்தாண்டு நேற்று பிறந்த நிலையில், பொதுமக்கள் நேரிலும் சமூக வலைதளங்கள் வாயிலாகவும் ஒருவருக்கொருவர் வாழ்த்து தெரிவித்து மகிழ்ந்தனர். டிசம்பர் 31ஆம் தேதி இரவே புத்தாண்டை வரவேற்பதற்கான கொண்டாட்டங்கள் கலை கட்டத் தொடங்கின. பாகிஸ்தானில் ஹோட்டல்கள், நட்சத்திர விடுதிகள் என அனைத்தும் நிரம்பி வழிந்தன. அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுக்க போலீசாரும் விடிய விடிய பாதுகாப்பில் ஈடுபட்டனர். இந்த நிலையில் பாகிஸ்தானில் வினோதமாக புத்தாண்டை வரவேற்றுள்ளனர்.

கராச்சியின் சில இடங்களில் நள்ளிரவு 12 மணி ஆனதும் நகரமே அதிர கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டு புத்தாண்டை வரவேற்றனர். அதில், பெண்கள், குழந்தைகள் உள்பட 22 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. 8 பேர் சிவில் மருத்துவமனையிலும், 4 பேர் ஜின்னா மருத்துவமனையில், 10 பேர் அப்பாஷி ஷாகித் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக 13 பேரை கைது செய்து காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர். அவர்களில் 3 பேர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதுபோன்ற சம்பவங்கள் இஸ்லாமாபாத், ராவல்பிண்டியிலும் நடைபெற்றுள்ளன. துப்பாக்கிச் சூடு காரணமாக காயம் ஏற்பட்டது  லாகூரிலும் நடந்துள்ளது என்றாலும் அதனை உறுதிப்படுத்த முடியவில்லை என அந்நாட்டு ஊடகங்கள் கூறுகின்றன.

பாகிஸ்தானில் துப்பாக்கி கலாச்சாரம் தலைவிரித்தாடுகிறது. அங்கு துப்பாக்கியால் சுடப்படுவது சர்வ சாதாரணம் போல நடந்து வருகிறது. இன்னும் சொல்லப்போனால் அதீத பாதுகாப்பில் இருக்கும் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மீதே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

First published:

Tags: Pakistan News in Tamil