ஹோம் /நியூஸ் /உலகம் /

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை விளாசிய தாலிபான்கள்!

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை விளாசிய தாலிபான்கள்!

imran khan

imran khan

இம்ரான் கான் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர் கிடையாது, அவரே ஒரு பொம்மை தான்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை தாலிபான்கள் வார்த்தைகளால் வறுத்தெடுத்துள்ளனர்.

பாகிஸ்தானே பெரும் பிரச்னையில் தான் உள்ளது, இம்ரான் கான் ஒரு பொம்மை என தாலிபான்கள் சகட்டு மேனிக்கு பாகிஸ்தான் பிரதமரை வார்த்தைகளால் வறுத்தெடுத்துள்ளது சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளது.

தாலிபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய பின்னர் இடைக்கால அரசை நிறுவியுள்ளனர், ஆனால் அவர்களின் புதிய அரசில் பெண்களுக்கு பிரநிதித்துவம் கொடுக்கவில்லை என்பதால் சர்வதேச அளவில் விமர்சனங்கள் எழுந்தன.

இந்நிலையில் பொம்மை அரசாங்கத்தை வைத்துக் கொண்டு ஆப்கானிஸ்தானால் தாக்குப்பிடிக்க முடியாது என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தாலிபான்கள் குறித்து சில நாட்களுக்கு முன் கருத்து கூறியிருந்தார். இம்ரான் கானின் இந்த கருத்துக்கு பதிலடி கொடுத்திருக்கின்றனர் தாலிபான்கள்.

தாலிபான் செய்தி தொடர்பாளர் நயா தவுர், ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், இம்ரான் கான் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர் கிடையாது, அவரே ஒரு பொம்மை தான். எங்கள் விவகாரத்தில் யாரும் தலையிட வேண்டாம், அது போல நாங்களும் யார் விவகாரத்திலும் தலையிட மாட்டோம் என அவர் குறிப்பிட்டிருந்தார்.

Read more: டாடா தயாரித்து வழங்கும் Airbus C295 ரக ஏர் லிஃப்டர் விமானங்களின் சிறப்புகள்!

முன்னதாக ஊடகம் ஒன்றுக்கு தாலிபான் செய்தித்தொடர்பாளர் நயா தவுர் அளித்த பேட்டியில், “நீங்கள் இம்ரான் பற்றி கேட்கிறீர்கள். அவர் ஆப்கானிஸ்தானில் அனைவரையும் உள்ளடக்கிய அரசாங்கள் வேண்டும் என்கிறார் அல்லவா? பாகிஸ்தானே பெரும் பிரச்னையில் தான் உள்ளது. ஏகப்பட்ட சிக்கல்களை சந்தித்து வருகின்றனர். இம்ரான் கான் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர் கிடையாது. பாகிஸ்தான் தேசத்தின் ஒப்புதல் இல்லாமலே அவர் பதவிக்கு வந்துள்ளார்.

imran khan

பாகிஸ்தான் மக்கள் தற்போதைய இம்ரான் கான் அரசாங்கம் பாகிஸ்தான் ராணுவத்தின் கைப்பாவை என்கின்றனர். பாகிஸ்தான் மண்ணின் மைந்தர்களுக்கு உரிமைகள் மறுக்கப்பட்டுள்ளன. சிறுபான்மையினர் மகிழ்ச்சியாக இல்லை. இதன் காரணமாகவே இம்ரான் ஆட்சியை பாகிஸ்தான் ராணுவத்தின் கைப்பாவை என்கின்றனர்.

Read more:  ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு – முழு விவரம்

யாருமே அரசாங்கத்தின் இயக்கம் பற்றி எதுவும் கூறக்கூடாது. நாங்கள் அந்நிய தலையீட்டை விரும்பவில்லை. அவரவர்கள் தங்கள் நாட்டின் விவகாரங்களை பார்க்க வேண்டும், அவர்களின் பிரச்னைகளுக்காக உழைக்க வேண்டும். பாகிஸ்தானில் நிறைய பிரச்னைகள் உள்ளன. அந்த பிரச்னைகளுக்கெல்லாம் நாங்கள் ஆலோசனை அல்லது தீர்வுகளை வழங்கவில்லை. ஏனென்றால் பாகிஸ்தானின் இறையாண்மையை நாங்கள் மதிக்கிறோம். இதையே பாகிஸ்தானிடமிருந்தும் நாங்கள் எதிர்பார்க்கிறோம்.

எங்கள் பிரச்னையில் தலையிட விரும்புபவர்களின் பிரச்னைகளில் நாங்களும் தலையிட உரிமை உள்ளது. என அவர் கூறியதாக ஃபிரைடே டைம்ஸ் இதழில் செய்தி வெளியாகி உள்ளது.

Published by:Arun
First published:

Tags: Afghanistan, Imran khan, Taliban