பாகிஸ்தானில் வீட்டுக்காவலில் இருந்த மசூத் அசார் விடுவிப்பு? உளவுத்துறை எச்சரிக்கை!

நாடாளுமன்ற தாக்குதல், மும்பை தொடர் குண்டு வெடிப்பு உள்ளிட்டவற்றுக்கு முக்கிய காரணமாக இருந்த ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் தலைவர் மசூத் அசாரை, சர்வதேச பயங்கரவாதியாக ஐ.நா. அறிவித்துள்ளது.

news18
Updated: September 9, 2019, 12:47 PM IST
பாகிஸ்தானில் வீட்டுக்காவலில் இருந்த மசூத் அசார் விடுவிப்பு? உளவுத்துறை எச்சரிக்கை!
மசூத் அசார்
news18
Updated: September 9, 2019, 12:47 PM IST
இந்தியாவில் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டுமென்பதற்காக, ஜெய்ஷ் இ முகமது தலைவர் மசூத் அசாரை, காவலில் இருந்து பாகிஸ்தான் ரகசியமாக விடுவித்துள்ளதாக, உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

நாடாளுமன்ற தாக்குதல், மும்பை தொடர் குண்டு வெடிப்பு உள்ளிட்டவற்றுக்கு முக்கிய காரணமாக இருந்த ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் தலைவர் மசூத் அசாரை, சர்வதேச பயங்கரவாதியாக ஐ.நா. அறிவித்துள்ளது.

மசூத் அசாரை தனிநபர் பயங்கரவாதி என்று, சில நாட்களுக்கு முன் உபா சட்டத்தின்கீழ் இந்தியாவும் அறிவித்தது.

பாகிஸ்தானைச் சேர்ந்த மசூத் அசாரை, சர்வதேச நெருக்கடி காரணமாக அந்நாடு வீட்டுக்காவலில் வைத்திருந்தது. இந்நிலையில், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதில் இருந்து, இந்தியா மீது பாகிஸ்தான் கடும் கோபத்தில் உள்ளது.

Also read... புதிய மின் இணைப்புக்கான டெபாசிட் கட்டணம் உயர்கிறது... பதிவுக்கட்டணத்தையும் 8 மடங்கு உயர்த்த திட்டம்!

காஷ்மீர் விவகாரத்தை புறக்கணிப்பதால் ஏற்படும் விளைவுகளுக்கு உலக நாடுகள்தான் பொறுப்பேற்க வேண்டுமென்று அந்நாட்டு பிரதமர் நேரடியாகவே மிரட்டல் விடுத்தார்.

Loading...

அதேநேரம், ஜம்மு மற்றும் ராஜஸ்தான் எல்லையில் படைகளையும் பாகிஸ்தான் குவித்து வருகிறது. இந்நிலையில், மசூத் அசாரை பாகிஸ்தான் ரகசியமாக விடுவித்துள்ளதாகவும், தீவிரவாத தாக்குதல்களை நிகழ்த்த திட்டமிட்டிருப்பதாகவும் இந்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. உளவுத்துறை எச்சரிக்கையை அடுத்து, இந்திய எல்லையில் வீரர்கள் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.

Also see...

First published: September 9, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...